என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
கேஜிஎப்-2 பாடல் சர்ச்சை - காங்கிரஸ் டுவிட்டர் கணக்கை முடக்க ஐகோர்ட்டு உத்தரவு
- ஒரு வீடியோவில் கே.ஜி.எப் 2 படத்தில் இடம்பெறும் பாடலை பின்னணியில் பயன்படுத்தி உள்ளனர்.
- தங்களிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாக எம்.ஆர்.டி மியூசிக் நிறுவனம் புகார்.
பெங்களூரு:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கினார். கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் வழியாக கடந்த மாதம் 23-ம் தேதி தெலுங்கானாவை அடைந்தார். ராகுல் காந்தியின் பாத யாத்திரை தெலுங்கானாவில் நேற்றுடன் முடிந்தது.
இதற்கிடையே, பாத யாத்திரையின் போது காங்கிரஸ் கட்சி கே.ஜி.எப்-2 படப்பாடலை அனுமதியின்றி பயன்படுத்தி வீடியோவாக தயாரித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது. இதுதொடர்பாக எம்ஆர்டி மியூசிக் நிறுவனம் தங்கள் அனுமதியின்றி படப் பாடலை பயன்படுத்தியதாக ராகுல் காந்தி, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் மீது அளித்த புகாரில் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன் கீழ் 403, 565, 120 ஆகிய பிரிவுகளின் கீழும், 1957-ம் ஆண்டு காப்புரிமை சட்டம் 63ன் கீழும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகா ஐகோர்ட்டில் நேற்று நடந்த விசாரணையில், காங்கிரஸ் கட்சி, பாரத் ஜோடோ யாத்திரை ஆகிய இரு டுவிட்டர் கணக்குகளை தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.