என் மலர்
இந்தியா
சீன அதிபர் எனது கிராமத்துக்கு வர விரும்பினார்.. இருவருக்கும் உள்ள சுவாரஸ்ய தொடர்பை பகிர்ந்த மோடி
- சீன தத்துவஞானி ஹியூன் சாங் குறித்து படித்தேன்
- அது சிறந்த திட்டம் என்று நான் கூறினேன்.
Zerodha இணை நிறுவனர் நிகில் காமத்துடன் "WTF is with Nikhil Kamath" என்ற போட்காஸ்ட் உரையாடலில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
இந்த 2 மணி நேர வீடியோவில் சிறு வயதில் ரெயில் நிலையத்தில் டீ விற்றது, குஜராத் முதல்வராக இருந்த காலம், சித்தாந்தம் மற்றும் இலட்சியத்தின் முக்கியத்துவம், அரசியலில் இளைஞர்களின் பங்கேற்பு, வெளிநாட்டு அரசியல் விவகாரங்கள் என பலவற்றை குறித்து மோடி மனம் திறந்துள்ளார்.
குஜராத்தின் வாட்நகரில் வாசித்தவன் நான். சீன தத்துவஞானி ஹியூன் சாங் வாட்நகரில் சில காலம் வாழ்ந்ததாகவும், அவரது பயணங்கள் குறித்தும் எங்கோ படித்தேன். அவரது வாழ்க்கை குறித்த படம் எடுக்கப்போவதாக கேள்விப்பட்டேன்.
எங்கள் கிராமத்தையும் படத்தில் இடம்பெறச் செய்யுமாறு சீன தூதரகத்துக்கு கடிதம் எழுதி கேட்டுக்கொண்டேன்.
பின்னர், 2014ல் பிரதமராக பதவியேற்றதும், பல்வேறு உலகத் தலைவர்களிடமிருந்து அழைப்பு வரத் தொடங்கியது. அவர்களில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒருவர். என்னுடனான உரையாடலின் போது, சீன அதிபர் ஜி ஜின்பிங் குஜராத் வர விருப்பம் தெரிவித்தார்.
அது சிறந்த திட்டம் என்று நான் கூறினேன். ஆனால் அவர் குறிப்பாக எனது கிராமமான வாத்நகருக்கு வரவேண்டும் என்று கூறியது என்னை ஆச்சரியப்பட வைத்தது.
அதன் பின் பேசிய ஜி ஜின்பிங், தத்துவஞானி ஹியூன் சாங் இந்தியாவில் உங்கள் கிராமத்தில் வெகு நாட்கள் இருந்து சீனாவுக்குத் திரும்பிய பிறகு, அவரது[ஜி ஜின்பிங்] சொந்த கிராமத்தில் அதிகபட்ச நேரத்தை செலவிட்டார் என்று தன்னிடம் கூறியதாகவும், இதுதான் எங்களுக்கிடையிலான தொடர்பு என்றும் பிரதமர் மோடி கூறினார்.