என் மலர்
இந்தியா
இந்த முறை பாஜக ஆட்சி இப்படித்தான் - காங்கிரஸ் பகிர்ந்த கேலிச்சித்திரம்
- பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றார்.
- சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் கிங் மேக்கர்களாக உருவாகி உள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது.
கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பாஜக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில் நேற்று முன் தினம் நடைபெற்ற என்.டி.ஏ புதிய எம்.பி.க்கள் கூட்டத்தில் அக்கூட்டணியின் பாராளுமன்ற தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து இன்று (ஜூன் 9) இரவு 7.15 மணியளவில் பிரதமராக மோடி 3-வது முறையாகப் பதவியேற்றார்.
பா.ஜ.க.வுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ் குமாரும் கிங் மேக்கர்களாக உருவாகி உள்ளனர். அவர்கள் இருவரும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் கட்சிக்கு அதிக மந்திரி பதவியை கேட்டுள்ளனர்.
இந்நிலையில், பாஜக கூட்டணி கட்சிகளின் கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளது.
அந்த படத்தில், தனி பெரும்பான்மை கிடைக்காமல் தவிக்கும் பாஜகவை தாங்கி பிடிக்கும் 2 கைத்தடிகளாக நிதிஷ்குமார் கட்சியும் சந்திரபாபு நாயுடு கட்சியும் இருப்பதாக காங்கிரஸ் கிண்டல் அடித்துள்ளது.