search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நான்கு மாநிலங்களை பிரித்து பில் பிரதேசம் என்ற புதிய மாநிலம் தேவை: பழங்குடியினர் கோரிக்கை
    X

    நான்கு மாநிலங்களை பிரித்து "பில் பிரதேசம்" என்ற புதிய மாநிலம் தேவை: பழங்குடியினர் கோரிக்கை

    • ராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களில் 12 மாவட்டங்களை பிரிக்க வேண்டும்.
    • மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து 13 மாவட்டங்களை பிரிக்க வேண்டும்.

    ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள 49 மாவட்டங்களை தனியாக பிரித்து பில் பிரதேசம் என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என பழங்குடியின சமூகத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். அதிலும் ராஜஸ்தானில் உள்ள 33 மாவட்டங்களில் 12 மாவட்டங்களை சேர்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

    பழங்குடியினரின் பில் சமூகத்தினரை சேர்ந்த மிகப்பெரிய அமைப்பான ஆதிவாசி பரிவார் உள்ளிட்ட 35 அமைப்புகள் இன்று மிப்பெரிய பேரணிக்கு அழைப்பு விடுவித்திருந்தன. ஆதிவாதி பரிவார் சன்ஸ்தா நிறுவனர் மேனகா தமோர், பேரணியின்போது பழங்குடியின பெண்கள் பண்டிதர்களின் அறிவுறுத்தல்களை பின்பற்றக்கூடாது எனத் தெரிவித்தார்.

    மேலும், பழங்குடியின குடும்பங்கள் பொட்டு வைக்கக் கூடாது, தாலி அணியக்கூடாது. பழங்குடியின சமூகத்தின் பெண்கள் மற்றும் இளம் பெண்கள் கல்வி மீது கவனம் செலுத்த வேண்டும். தற்போதில் இருந்து எல்லோரும் உண்ணாவிரத்தை நிறுத்த வேண்டும். நாம் இந்துக்கள் அல்ல எனக் கூறினார்.

    நான்கு மாநிலங்களில் ஆதிவாசி பரிவார் சன்ஸ்தா பரவி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாரத் ஆதிவாசி கட்சி (பிஏபி) எம்.பி. ராஜ்கமார் ரோத் "பில் பிரதேசம்" என்பது புதிய கோரிக்கை அல்ல. பிஏபி இந்த கோரிக்கை வலுவாக வலியுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த மிகப்பெரிய பேரணிக்குப் பிறகு அமைப்பின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்து கோரிக்கையை முன்வைப்போம்.

    ராஜஸ்தான் மாநிலத்தை தவிர்த்து மத்திய பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியினரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மெகா பேரணியைத் தொடர்ந்து பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டது. இணைய தள சேவைகள் முடக்கப்பட்டன.

    ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து 12 மாநிலங்களையும், மத்திய பிரதேசத்தில் இருந்து 13 மாநிலங்களையும் பிரித்து பில் பிரதேச மாநிலத்தில் இணைக்க வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.

    ராஜஸ்தான் மாநில பழங்குடியின துறை மந்திரி பாபுலால் கராடி கூறுகையில் "சாதி அடிப்படையில் மாநிலத்தை உருவாக்க முடியாது. இது நடந்தால், மற்ற மக்களும் இதுபோன்ற கோரிக்கை வைப்பார்கள். மத்திய அரசுக்கு நாங்கள் பரிந்துரை செய்ய மாட்டோம். மதம் மாறியவர்கள் பழங்குடியின இட ஒதுக்கீட்டின் பலனைப் பெறக்கூடாது." என்றார்.

    Next Story
    ×