என் மலர்
இந்தியா

காதலை தேடிய முயற்சியில் ரூ.6.3 கோடி வாழ்நாள் சேமிப்பை இழந்த வாலிபர்
- அனிதா தனது நலம் விரும்பி என்றும், அவர் சரியான ஆலோசனையை வழங்குகிறார் என்றும் சிங் நம்பத் தொடங்கினார்.
- அனிதாவின் டேட்டிங் செயலியின் சுயவிவரம் போலியானது என்று தெரியவந்துள்ளது.
இன்றைய காலக்கட்டத்தில் திருமண வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் மறுவாழ்க்கைக்கு உதவுவதாக பல ஆன்லைன் நிறுவனங்கள் விளம்பரம் செய்து வருகின்றன. இதனால் சிலருக்கு நன்மை நடந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு தோல்வி தான் கிடைக்கிறது.
அதே போல் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வரும் டேட்டிங் செயலில் விவாகரத்து பெற்று தனிமையில் இருந்த வாலிபர் காதலை தேடும் முயற்சியில் தனது வாழ்நாளுக்காக சேமித்து வைத்த பணத்தை இழந்தள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
டேட்டிங் செயலில் சுயவிவரத்தை பதிவு செய்த நெய்டாவைச் சேர்ந்த தல்ஜித் சிங் என்பவருக்கு அனிதா என்ற பெண் அறிமுகமாகி உள்ளார். ஆரம்பத்தில் சாதாரணமாக பேச ஆரம்பித்த இவர்கள் நாளடைவில் இருவருக்கும் இடையேயான பேச்சும், நெருக்கமும் அதிகரித்தது.
ஒரு கட்டத்தில் தல்ஜித் சிங்கின் நம்பிக்கையை பெற்ற அனிதா, பங்குச்சந்ததை மூலம் பெரும் லாபம் ஈட்டுவது குறித்து தகவல்களை பகிர்ந்து 3 நிறுவனங்களின் பெயர்களையும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து முதலில் ரூ.3.2 லட்சம் முதலீடு செய்து சில மணி நேரங்களுக்குள் ரூ.24,000-ஐ சிங் சம்பாதித்தார். இதனால் அனிதா மீதான நம்பிக்கை சிங்கிற்கு வலுவடைந்து அனிதா தனது நலம் விரும்பி என்றும், அவர் சரியான ஆலோசனையை வழங்குகிறார் என்றும் சிங் நம்பத் தொடங்கினார்.
இதனை தொடர்ந்து தனது வாழ்நாள் சேமிப்பான சுமார் ரூ.4.5 கோடியை முதலீட்டில் மாற்றினார். மேலும் அனிதாவின் ஆலோசனையின் பேரில், சிங் ரூ.2 கோடி கடனை எடுத்து அதையும் முதலீடு செய்தார். மொத்தம் ரூ.6.5 கோடியை 30 வெவ்வேறு பரிவர்த்தனைகள் மூலம் 25 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றினார்.
இதையடுத்து முதலீடு செய்யப்பட்ட தொகையில் 30 சதவீதத்தை திருப்பி தரும்படி அனிதாவிடம் சிங் தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து சிங்குடனான தொடர்பை அனிதா துண்டித்துள்ளார். மேலும் அனிதா தெரிவித்ததாகக் கூறப்படும் 3 நிறுவனங்களில் 2 துண்டிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த சிங் இச்சம்பவம் தொடர்பாக நொய்டா செக்டர் 36-ல் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில், அனிதாவின் டேட்டிங் செயலியின் சுயவிவரம் போலியானது என்று தெரியவந்துள்ளது. மேலும் பணம் மாற்றப்பட்ட கணக்குகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.