search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஸ்மிரிதி இரானி சந்திப்பு
    X

    அமித் ஷா    திரவுபதி முர்மு

    குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன், மத்திய மந்திரிகள் அமித்ஷா, ஸ்மிரிதி இரானி சந்திப்பு

    • எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடங்கியுள்ளது.
    • சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க மத்திய அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

    எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திரவுபதி முர்மு குறித்து மககளவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்த ராஷ்டிரபட்னி என்ற வார்த்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிரிதி இரானி உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.

    இந்த பிரச்சினை காரணமாக எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சி உறுப்பினர்களும் போட்டு போட்டு கோஷமிட்டதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்றும் முடங்கின. இந்நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவரது மாளிகையில் சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். எனினும் இந்த சந்திப்பின் முழு விபரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.


    அவரை தொடர்ந்து மத்திய மந்திரி இரானியும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்தார். குடியரசுத் தலைவர் அழைப்பின்பேரில் அவரை சந்தித்தாக இரானியும் குறிப்பிட்டுள்ளார். ஒரே நாளில் மத்திய மந்திரிகள் இருவர் அடுத்தடுத்து குடியரசுத் தலைவரை சந்தித்துள்ளது டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×