search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    உணவக உரிமையாளர்களின் பெயரை கேட்கும் உ.பி. அரசு: பிரியங்கா காந்தி கண்டனம்
    X

    உணவக உரிமையாளர்களின் பெயரை கேட்கும் உ.பி. அரசு: பிரியங்கா காந்தி கண்டனம்

    • இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்
    • இந்த உத்தரவை பிறப்பித்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    உத்தரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களைக் காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் உத்தரபிரதேச அரசின் இந்த உத்தரவை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "நமது அரசியலமைப்பு மனிதர்களிடையே ஜாதி, மதம், மொழி அல்லது வேறு எந்த அடிப்படையிலும் பாகுபாடு காட்டப்பட மாட்டாது என்று உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் உத்தரபிரதேசத்தில் உள்ள உணவக உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்க வேண்டும் என்ற உத்தரவு நமது அரசியலமைப்பு, நமது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் மற்றும் அதை பிறப்பித்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×