என் மலர்tooltip icon

    இந்தியா

    திருமணமான 15 நாட்களில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி
    X

    திருமணமான 15 நாட்களில் காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்ற மனைவி

    • மார்ச் 5 ஆம் தேதி பிரகதியை திலீப் என்ற நபருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
    • பிரகதி அவரது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது

    உத்தரபிரதேசத்தில் திருமணமான 15 நாட்களில் மனைவி கூலிப்படையினரை ஏவி கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    பிரகதி யாதவ் மற்றும் அனுராக் யாதவ் ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களின் காதலை, அவர்களது பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை.

    இந்நிலையில், மார்ச் 5 ஆம் தேதி பிரகதியை திலீப் என்ற நபருக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    மார்ச் 19 அன்று, திலீப் வயலில் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திலீப் மார்ச் 20 அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக திலீப்பின் சகோதரர் சஹார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    போலீசாரின் விசாரணையில் திலீப்பின் மனைவி பிரகதி அவரது காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது

    இருவரும் திலீப்பைக் கொலை செய்ய ராமாஜி சவுத்ரி என்ற காண்டராக்ட் கொலையாளியை நியமித்து, அந்த வேலையைச் செய்ய அவருக்கு ரூ.2 லட்சம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

    சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் திலீப்பை கொலை செய்த 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 2 கைத்துப்பாக்கிகள், நான்கு தோட்டாக்கள், ஒரு பைக், இரண்டு மொபைல் போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்தக் குற்றத்தில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×