என் மலர்
இந்தியா

நீதித்துறையை உலுக்கிய வழக்கில் 17 வருடங்கள் கழித்து தீர்ப்பு - முன்னாள் நீதிபதி விடுவிப்பு!
- உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டில் ரூ.15 லட்சம் கொண்ட ஒரு பை வந்தது.
- அவர்களில் ஒருவர் விசாரணை நடந்து வந்தபோது இறந்துவிட்டார்.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் கோடிக்கணக்கான பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தற்போது சர்ச்சையாகி வருகிறது.
இந்நிலையில் நீதித்துறையை உலுக்கிய வழக்கு ஒன்றில் 17 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 13, 2008, அப்போதைய பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி நிர்மல்ஜித் கவுர் வீட்டில் ரூ.15 லட்சம் கொண்ட ஒரு பை டெலிவரி செய்யப்பட்டது. இந்த பணம் குறித்து அவர் போலீசில் புகார் அளித்தார்.
இந்த பணம் மற்றொரு நீதிபதி நிர்மல் யாதவ் என்பவருக்கு வழங்கப்பட இருந்ததாகவும், தவறுதலாக நிர்மல்ஜித் கவுர் வீட்டில் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. சொத்து பேரம் தொடர்பான விவகாரத்தில் சாதமாக செயல்பட இந்த பணம் நிர்மல் யாதவுக்கு லஞ்சமாக வழங்கப்பட இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
நிர்மல் யாதவ்
அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி நிர்மல் யாதவ் உட்பட 5 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் விசாரணை நடந்து வந்தபோது இறந்துவிட்டார்.
இந்நிலையில் 17 வருடங்கள் கழித்து தற்போது முன்னாள் நீதிபதி நிர்மல் யாதவ், மற்றும் வழக்கில் தொடர்புடைய அனைவரயும் குற்றவாளிகள் அல்ல என்று தீர்ப்பளித்து சண்டிகரில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அவர்களை வழக்கில் இருந்து விடுத்துள்ளது. கடந்த வியாழக்கிழமை இறுதி வாதங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.