என் மலர்
இந்தியா
X
தேசிய விருது வென்ற பிரபல மலையாள இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ் காலமானார்
Byமாலை மலர்24 Sept 2023 11:36 PM IST
- 9 கேரள அரசு விருதுகளை கே.ஜி.ஜார்ஜ் வென்றுள்ளார்.
- மலையாள சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார்.
திருவனந்தபுரம்:
மலையாள சினிமாவின் புகழ்பெற்ற இயக்குநர் கே.ஜி.ஜார்ஜ். சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று கே.ஜி.ஜார்ஜ் காலமானார். அவருக்கு வயது 77.
கேரளாவின் பத்தனம்திட்டாவில் பிறந்தவரான கே.ஜி.ஜார்ஜ், கடந்த 1975-ம் ஆண்டு வெளியான 'ஸ்வப்னதானம்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் சிறந்த மலையாளப் படத்துக்கான தேசிய விருதை வென்றது.
மேலும் ஊழ்க்கடல், மேளா, யவனிகா, லேகாயுடே மரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் ஆகிய பல்வேறு வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார். இதுவரை 9 கேரள அரசு விருதுகளை கே.ஜி.ஜார்ஜ் வென்றுள்ளார். மலையாள சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்தார். அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Next Story
×
X