என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![VIDEO: சாகசத்தை தொடங்கிய போர் விமானங்கள்.. பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி தொடக்கம் VIDEO: சாகசத்தை தொடங்கிய போர் விமானங்கள்.. பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி தொடக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2025/02/10/9146580-mm.webp)
கோப்புப் படம்
VIDEO: சாகசத்தை தொடங்கிய போர் விமானங்கள்.. பெங்களூரு சர்வதேச விமான கண்காட்சி தொடக்கம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பெங்களூரு ஹெலகங்கா விமானப்படைத் தளத்தில் நடைபெறுகிறது.
- தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெறும்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 15 ஆவது சர்வதேச விமான கண்காட்சி இன்று முதல் தொடங்கியுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
பெங்களூருவில் 2 ஆண்டுக்கு ஒருமுறை என இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூரு ஹெலகங்கா விமானப்படைத் தளத்தில் நடைபெறுகிறது.
இன்று பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கிய விமான கண்காட்சி பிப்ரவரி 14-ம் தேதி வரை என 5 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெறும்.
விமான கண்காட்சி நடைபெறும் 5 நாட்களும் காலை ஒருமுறையும், மதியம் ஒருமுறையும் என 2 முறை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
#WATCH | Bengaluru: Aero India 2025 underway at Yelahanka Air Force Station.Scheduled to be held from February 10 to 14, Aero India 2025 is the 15th edition of Asia's top aerospace exhibition. pic.twitter.com/5ggwSy3JSz
— ANI (@ANI) February 10, 2025
விமான கண்காட்சியைக் காண பலரும் ஆர்வமுடன் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளின் எப் 35, எஸ்யூ 35 போர் விமானங்களும் எஸ்யூ 57,எப் 16 விமானங்களும் வான்வெளி சாகசங்களில் ஈடுபட உள்ளன.