search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    VIDEO: நகைக்கடை முதலாளி தலையைத் துளைத்த துப்பாக்கி குண்டு.. பட்டப்பகலில் நடந்த  கொலை
    X

    VIDEO: நகைக்கடை முதலாளி தலையைத் துளைத்த துப்பாக்கி குண்டு.. பட்டப்பகலில் நடந்த கொலை

    • அவரின் நகைக்கடைக்கு வெளியே வைத்து சிமர்பால் சிங் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டது அதில் பதிவாகி உள்ளது.
    • குடும்பத்தை வீட்டில் விட்டுவிட்டு, துப்பாக்கியுடன் ஜெய்பால் ஜூவல்லர்ஸ் கடைக்கு ஜஸ்தீப் திரும்பினார்.

    பஞ்சாபில் தொழில் தகராறில் நகைக் கடை முதலாளி சுட்டுக்கொல்லப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகி உள்ளது.

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள டாலிவேல் சவுக்கில் தகராறில் நகைக்கடை உரிமையாளர் சிமர்பால் சிங் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    அவரின் நகைக்கடைக்கு வெளியே வைத்து சிமர்பால் சிங் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டது அதில் பதிவாகி உள்ளது.

    ஜெய்பால் ஜூவல்லர்ஸ் உரிமையாளராக இருந்த சிமர்பால் சிங்கை தங்க பேரம் தொடர்பாக மற்றொரு நகை வியாபாரியான ஜஸ்தீப் சிங் சான் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை அணுகியுள்ளனர்.

    கடையில் வைத்து சிமர்பால் மற்றும் ஜஸ்தீப் குடும்பத்தினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஜஸ்தீப் தனது குடும்பத்தினருடன் கடையை விட்டு வெளியேறினார்.

    குடும்பத்தை வீட்டில் விட்டுவிட்டு, துப்பாக்கியுடன் ஜெய்பால் ஜூவல்லர்ஸ் கடைக்கு திரும்பிய ஜஸ்தீப், சிமர்பால் சிங்கின் தலையில் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினார்.

    சிமர்பால் அமிர்தசரஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் தலையில் குண்டு காயம் காரணமாக இறந்தார்.

    தங்கம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்த சம்பவம் நடந்துள்ளது என போலீசார் உறுதி செய்தனர். தப்பியோடியஜெஸ்தீப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×