என் மலர்
இந்தியா

VIDEO: ஐஸ்கிரீமை இப்படியும் சாப்பிடலாமா - எங்கிருந்து யோசிப்பாங்க?
- வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இணையத்தில் பரவும் வீடியோக்கள் சில வரவேற்பையும், சில விமர்சனங்களையும் சந்திக்கும். ஆனால் தற்போது வைரலாகும் வீடியோ ஐஸ்கிரீம் பிரியர்கள் இடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
சிறுவர்கள் முதல் பெரியவர்களை வரை வயது வித்தியாசம் இன்றி சாப்பிட விரும்பக்கூடியது ஐஸ்கிரீம். அது கோடைக்காலமாக இருந்தாலும் சரி, குளிர்காலத்தில் மாலை நேரமாக இருந்தாலும் சரி ஐஸ்கிரீம் சாப்பிட நினைத்தாலே மகிழ்ச்சி தான். அப்படி ஐஸ்கிரீம் மீது அவ்வளவு ஆசை கொண்ட இளம்பெண் ஒருவர் தனது வீட்டு பிரிட்ஜில் 'ஐஸ்கிரீம் டிராயரை' உருவாக்கி உள்ளார். இதுதொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், அந்த இளம்பெண் பல்வேறு வகையான ஐஸ்கிரீம் டப்பாக்களை எடுத்து அதை அனைத்தும் ஒரே டப்பாவில் சேர்த்து கலந்து மீண்டும் அவற்றை பிரிட்ஜில் உள்ள டிரேயில் வைத்து பதப்படுத்தி அதன்பின் அதனை சுவைக்கிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒரு பயனர், பொதுவாக ஐஸ் கட்டிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஃப்ரீசர் பெட்டி, ஐஸ்கிரீமை சேமிக்க சிறந்த இடம் அல்ல என்றும் மற்றொருவர், "அதையெல்லாம் யார் சுத்தம் செய்யப் போகிறார்கள்?" என்றும் தெரிவித்தனர்.