search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாகிஸ்தான் போர் வெற்றி தின கொண்டாட்டம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை
    X

    டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மந்திரி ராஜ்நாத்சிங் மரியாதை செலுத்திய காட்சி.

    பாகிஸ்தான் போர் வெற்றி தின கொண்டாட்டம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை

    • போரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் விஜய் திவஸ் என்ற பெயரில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • முப்படை அதிகாரிகள் புடை சூழ, ராஜ்நாத் சிங் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    புதுடெல்லி:

    1971-ம் ஆண்டு நடந்த போரில் பாகிஸ்தானை இந்தியா வெற்றி கொண்டது. இந்த வெற்றியின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16-ந் தேதி வெற்றி தினம் கொண்டாடப்படுகிறது.

    போரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் விஜய் திவஸ் என்ற பெயரில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வங்காளதேசம் நாடு உருவாக இந்த போர் தான் வழிவகுத்தது.

    போரில் பாகிஸ்தானை இந்தியா வென்ற 51-வது ஆண்டு வெற்றி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. வெற்றி தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவு சின்னம் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அங்கு பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

    முப்படை அதிகாரிகள் புடை சூழ, ராஜ்நாத் சிங் போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

    அதே போல் முப்படை தலைமை தளபதி மற்றும் அதிகாரிகளும் போரில் உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    நாடு முழுவதும் உள்ள போர் நினைவு சின்னங்களில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அங்கு மலர் வளையம் வைத்து வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

    Next Story
    ×