என் மலர்tooltip icon

    இந்தியா

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா - கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல்
    X

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா - கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல்

    • விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இருக்கும்.
    • நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அமர்வுகள் இன்று தொடங்குகின்றன. இன்று வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவம் நிலையில், இது தொடர்பான விவாதங்கள் அனல் பறக்கும் வகையில் இருக்கும்.

    கடந்த மாதம் 31-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது. பரபரப்பான அரசியல் சூழலில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இரு அவைகளிலும் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று பாராளுமன்ற கூட்டத்தொடர் அமர்வுகள் துவங்க இருக்கிறது. அந்த வகையில், இன்று பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவின் பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.

    வக்பு வாரிய திருத்த மசோதாவில் 14 திருத்தங்கள் செய்யப்பட்ட நிலையில், கூட்டுக்குழு அறிக்கையை ஜெகதாம்பிகா பால் கடந்த வியாழக்கிழமை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்பித்தார். இந்த கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    வக்பு வாரிய சட்ட திருத்தங்கள் சிறுபான்மையினருக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சிகள் இந்த திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த சூழலில் இன்று வக்பு வாரிய திருத்த மசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.

    பாராளுமன்றத்தில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் ஜனாதிபதி உரைக்கு பதிலளிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×