search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏசியில் இருந்த பாம்பு கூட்டம்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ
    X

    ஏசியில் இருந்த பாம்பு கூட்டம்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ

    • கிட்டத்தட்ட 4-5 பாம்புகள் ஒன்றாக ஏசியில் குடித்தனம் நடத்தி வந்துள்ளன.
    • நீண்ட நாட்களாக ஏசி பயன்படுத்தாததால் பாம்பு வந்திருக்க கூடம் என பாம்பு பிடி வீரர் தெரிவித்தார்.

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் பெண்டுர்தி எனும் பகுதியை சந்திர நாராயணன். இவரது வீட்டில் உள்ள ஏசியில் பாம்பு இருப்பதாக பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் அனுப்பினர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடி வீரர் ஏசிக்குள் அழையா விருந்தாளியாக வந்த பாம்புகளை பிடித்தார். பின்னர் அந்த பாம்புகளை பத்திரமாக மீட்டு பைக்குள் போட்டு எடுத்து சென்றனர். நீண்ட நாட்களாக ஏசி பயன்படுத்தாததால் பாம்பு வந்திருக்க கூடம் என பாம்பு பிடி வீரர் தெரிவித்தார்.

    இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏசியின் மேல் இருக்கும் மூடியை ஒருவர் கழற்றி அதிலிருந்து கயிறு போன்ற ஏதோ ஒன்றை எடுக்கிறார். கொஞ்சம் உற்று பார்த்த பிறகுதான் தெரிகிறது அது பாம்பு என்று. ஒரு பாம்பு அல்ல, கிட்டத்தட்ட 4-5 பாம்புகள் ஒன்றாக ஏசியில் குடித்தனம் நடத்தி வந்துள்ளன.

    இதை பார்த்த பலர் தங்கள் வீடுகளிலும் ஏசி இருப்பதாகவும், இனி அதை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக பார்த்து சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் ஏசி வைத்திருக்கும் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    Next Story
    ×