என் மலர்
இந்தியா

தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்ததால் மகா கும்பமேளாவில் குளிக்கவில்லை- கால்பந்து வீரர்

- திரி வேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது.
- சிரங்கு அரிப்புடன் திரும்பி வர நான் விரும்பவில்லை.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ்நகரில் 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் என்ற இடத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு என்பதால் நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு சென்று திரி வேணி சங்க மத்தில் புனித நீராடி வருகின்றனர். வாழ்வில் மிகவும் அரிய நிகழ்வு என்பதால் பல முக்கிய பிரமுகர்களும் மகா கும்பமேளாவுக்கு சென்று புனித நீராடி வருகின்றனர்.
இந்தநிலையில் திரி வேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்ததால் குளிக்காமல் வந்து விட்டதாக மகா கும்பமேளாவுக்கு சென்றிருந்த கேரள மாநில கால்பந்து வீரரான வினீத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
மகா கும்பமேளா நிகழ்வு ஒரு சிறந்த நிகழ்வு என்று நினைத்து அங்கு நான் சென்றேன். என் அனுபவத்தில் அது அப்படி இல்லை. மிகப்பெரிய கூட்டம் இருந்தது. திரி வேணி சங்கமத்தில் தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது. சிரங்கு அரிப்புடன் திரும்பி வர நான் விரும்பவில்லை. இதனால் அந்த அழுக்கு நீரில் நான் குளிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.