என் மலர்
சினிமா செய்திகள்
வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது - நடிகர் சூர்யா வேதனை
- கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 250க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளனர்.
- பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது பிரார்த்தனைகள்.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு மிகப்பெரிய சம்பவமாக மாறி இருக்கிறது. அதிலும் முண்டக்கை பகுதி மிகப்பெரிய அழிவை சந்தித்து இருக்கிறது.
அங்கிருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன. இதனால் அந்த இடத்தில் வீடுகள் தடமே இல்லாமல் காட்சி அளிக்கிறது. அனைத்து இடங்களும் மண்ணாலும், மரங்கள் மற்றும் பாறைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.
கேரள நிலச்சரிவில் சிக்கி இதுவரை 250க்கும் மேற்பட்டோர் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், வயநாடு நிலச்சரிவு தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் நடிகர் சூர்யா பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "வயநாடு நிலச்சரிவு சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு எனது பிரார்த்தனைகள். மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், களத்தில் உள்ள பொது மக்களுக்கும் தலைவணங்குகிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.