search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசியை நாடு கடத்துவோம் - தெலுங்கானா பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு
    X

    பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசியை நாடு கடத்துவோம் - தெலுங்கானா பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு

    • பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள் கோழைகள். நாங்கள் ஓட மாட்டோம், நாங்கள் கோழைகள் அல்ல.
    • முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது நண்பர்களை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்

    கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்கிடையே உத்தரபிரதேசத்தில் மசூதிகளில் ஜும்மா தொழுகையைத் தடுக்க முயன்றதாகக் பாஜக அரசையும், தலைவர்களையும் AIMIM கட்சி தலைவரும் ஐதராபாத் எம்பியுமான அசாதுதீமன் ஓவைசி கடுமையாக சாடினார்.

    ஒரு கூட்டத்தில் பேசியிருந்த ஓவைசி, "சிலர் உங்களுக்கு இவ்வளவு பயமாக இருந்தால், நீங்கள் தொழுகை செய்ய வேண்டாம், வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    எங்கள் மசூதிகளை மூடியதைப் போல, எங்களை நாங்களும் மூடிக்கொள்ள வேண்டும், இல்லையெனில் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

    பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள் கோழைகள். நாங்கள் ஓட மாட்டோம், நாங்கள் கோழைகள் அல்ல. ஒரு முதலமைச்சர் (யோகி ஆதித்யநாத்) ஜும்மா தொழுகையை வீட்டிலும் நிறைவேற்றலாம் என்று கூறினார். நாங்கள் என்ன செய்ய முடியும், என்ன செய்யக்கூடாது என்று சொல்ல அவர் யார்? என்று பேசியிருந்தார்.

    உத்தரபிரதேசத்தின் சம்பல் மாவட்ட வட்ட அதிகாரி அனுஜ் சவுத்ரி, ஹோலி வண்ணங்களால் சங்கடப்படுபவர்கள் உள்ளேயே இருக்க வேண்டும் என்று கூறியதை ஓவைசி சுட்டிக்காட்டினார்.

    இந்நிலையில் ஒவைசி கருத்துக்கள் குறித்து பேசிய தெலுங்கானா பாஜகவை சேர்ந்த கோஷாமஹால் எம்.எல்.ஏ ராஜா சிங், அசாதுதீன் ஓவைசி அரசியல் ஆதாயங்களுக்காக அமைதியின்மையை உருவாக்க முயற்சிப்பதாக விமர்சித்தார்.

    மேலும் அவர் பேசியதாவது, தெலுங்கானாவில் தனது கட்சி(பாஜக) ஆட்சிக்கு வந்தால், ஓவைசி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்தார். ஓவைசிக்கு பைத்தியம் பிடித்திருப்பதாகக் கூறிய ராஜா சிங், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது நண்பர்களை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசியை நாடு கடத்துவோம் - தெலுங்கானா பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு

    தெலுங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஓவைசி நாடுகடத்தப்படுவர் என பாஜக எம்எல்ஏ கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    Next Story
    ×