என் மலர்tooltip icon

    இந்தியா

    வேறொரு ஆணுடன் பேசக்கூடாது.. கண்டிஷன் போட்ட கணவருக்கு காபியில் விஷத்தை கலந்து கொடுத்த மனைவி!
    X

    வேறொரு ஆணுடன் பேசக்கூடாது.. கண்டிஷன் போட்ட கணவருக்கு காபியில் விஷத்தை கலந்து கொடுத்த மனைவி!

    • இருவருக்கிடையேயும் சதா வாக்குவாதம் நடந்து வந்துள்ளது.
    • சம்பவத்தின் பின் தலைமறைவான பிங்கியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    உத்தரப் பிரதேசத்தில் முசாபர்நகரின் பகேலா கிராமத்தை சேர்ந்தவர் அனுஜ் சர்மா (30 வயது). இரண்டு வருடங்களுக்கு முன்பு பிங்கி (26 வயது) என்பவருடன் அவருக்கு திருமணம் நடந்தது.

    இந்நிலையில் வேறொரு ஆணுடன் பிங்கி பேசுவதற்கு கணவர் அனுஜ் சர்மா எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் இருவருக்கிடையேயும் சதா வாக்குவாதம் நடந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி பிங்கி அனுஜின் காபியில் விஷம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

    அதைக்குடித்ததும் அனுஜின் உடல்நிலை மோசடமைந்தது. அவர் கட்டௌலியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் வேறொரு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

    இந்நிலையில் அனுஜின் சகோதரி கொடுத்த புகாரின்பேரில் பிங்கி மீது காலவத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சம்பவத்தின் பின் தலைமறைவான பிங்கியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    பிங்கிக்கு திருமணத்தின் முன்பே வெவேறு ஆணுடன் பழக்கம் இருந்ததாகவும் அவரின் விருப்பத்துக்கு மாறாக அனுஜ் உடன் திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும் கிராமத்தினர் கூறுகின்றனர்.

    Next Story
    ×