search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வாக்குச்சாவடி வாரியான வாக்காளர் தரவை ஆன்லைனில் பதிவிடுவது குறித்து ஆலோசிக்க  தயார்: தேர்தல் ஆணையம்
    X

    வாக்குச்சாவடி வாரியான வாக்காளர் தரவை ஆன்லைனில் பதிவிடுவது குறித்து ஆலோசிக்க தயார்: தேர்தல் ஆணையம்

    • தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இதுகுறித்து விவாதிக்க விரும்புகிறார்.
    • இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 28-ம் தேதி ஒத்திவைத்தது.

    புதுடெல்லி:

    பாராளுமன்றம் மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் வாக்குப்பதிவு முடிந்த 48 மணி நேரத்திற்குள் வாக்குச்சாவடி வாரியான வாக்குப்பதிவுத் தரவுகளை அதன் இணையதளத்தில் பதிவேற்ற தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுக்கள் தொடரப்பட்டன.

    இந்த மனுக்களை திரிணாமுல் காஙகிரஸ் எம்.பி.யான மஹூவா மொய்த்ரா மற்றும் என்ஜிஓ அமைப்பும் தாக்கல் செய்தன. இந்த மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனீந்தர் சிங், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் சந்தித்து இந்தக் குறையை விவாதிக்க விரும்புவதாக தெரிவித்தார். புதிய தலைமை தேர்தல் ஆணையர் இப்போது இருக்கிறார். மனுதாரர்கள் அவரைச் சந்தித்து இது குறித்து விவாதிக்கலாம் என்றார்.

    இதைத்தொடர்ந்து தலைமை நீதிபதி, மனுதாரர்கள் தேர்தல் ஆணையத்தில் ஒரு பிரதிநிதித்துவத்தை தாக்கல் செய்யலாம். தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஒரு விசாரணையை நடத்தி அதைப் பற்றி முன்கூட்டியே தெரிவிக்கும்

    வாக்குச்சாவடி வாரியான வாக்காளர் வாக்குப்பதிவுத் தரவை அதன் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆலோசிக்கத் தயாராக இருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையம் சமர்ப்பித்ததை சுப்ரீம் கோர்ட் கவனத்தில் கொண்டு, மனுதாரர்கள் 10 நாட்களுக்குள் தேர்தல் குழு முன் பிரதிநிதித்துவங்களைச் செய்யும்படி கேட்டுக் கொண்டது.

    இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 28-ம் தேதி ஒத்திவைத்தது.

    Next Story
    ×