என் மலர்
இந்தியா
ஐஸ் கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் - அடுத்து என்ன ஆச்சு தெரியுமா?
- ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.
- சுவைத்துக் கொண்டிருந்த போது நாக்கில் ஏதோ தட்டுப்பட்டது.
மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் கோடை வெயிலின் தாக்கம் காரணமாக உடலையும் மனதையும் ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஆன்லைனில் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட முடிவு செய்தார். மும்பையை அடுத்த மலாத் பகுதியில் வசிக்கும் இந்த பெண் யுமோ பிராண்டு ஐஸ் கிரீமை ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.
ஐஸ் கிரீம் ஆர்டர் செய்து, அதனை ருசிக்க காத்திருந்த பெண்ணுக்கு சிறிது நேரத்தில் குளு குளு ஐஸ் கிரீம் டெலிவரி செய்யப்பட்டது. கொளுத்தும் வெப்பத்தில் ஐஸ் கிரீம் நம்மை காப்பாற்றிவிடும் என்ற எண்ணத்தில் ஐஸ் கிரீம் சாப்பிட துவங்கினார்.
ஐஸ் கிரீம் ருசியில் மெய்மறந்த பெண், அதனை சுவைத்துக் கொண்டிருந்த போது நாக்கில் ஏதோ தட்டுப்பட்டது. ஐஸ் கிரீமில் என்ன இருந்துவிட போகிறது என அதை உற்று நோக்கியவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. தான் ஆசை ஆசையாய் வாங்கி சுவைத்த ஐஸ் கிரீமில் துண்டிக்கப்பட்ட மனித விரல் இருந்தது.
அதிர்ச்சியுடன் துரிதமாக செயல்பட்ட பெண், தான் சுவைத்த ஐஸ் கிரீம் உருகுவதற்குள் அதனை புகைப்படம் எடுத்துக் கொண்டு, உடனடியாக மலாத் காவல் நிலையம் விரைந்தார். அங்கு தான் ஆர்டர் செய்து சுவைத்த ஐஸ் கிரீமில் கைவிரல் இருந்தது குறித்து புகார் அளித்தார்.
புகாரை எடுத்துக் கொண்ட மலாத் காவல் துறை அதிகாரிகள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஐஸ் கிரீம் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு செய்து, ஐஸ் கிரீமை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஐஸ் கிரீமில் இருந்த மனித விரலை தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.