என் மலர்
இந்தியா

VIDEO: மகா கும்பமேளாவில் செல்போனை புனித நீராட்டிய வாலிபர்

- மகா கும்பமேளாவில் புனித நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
- சிலர் தங்கள் செல்லப்பிராணிகளை திரிவேணி சங்கமத்திற்கு அழைத்து வந்து புனித நீராட்டி செல்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் உலகம் முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து புனித நீராடி வருகின்றனர். அங்கு புனித நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சிலர் தங்கள் முன்னோர்களின் புகைப்படங்களை கொண்டு வந்து இங்குள்ள நீரில் மூழ்கடித்து செல்கின்றனர். சிலர் தங்கள் செல்லப்பிராணிகளை திரிவேணி சங்கமத்திற்கு அழைத்து வந்து புனித நீராட்டி செல்கின்றனர்.
இந்நிலையில் மகா கும்பமேளாவில் புனித நீராடிய வாலிபர் ஒருவர் தனது செல்போனையும் புனித நீராட்டிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், இளைஞர் ஒருவர் பேசும் காட்சிகள் உள்ளது. பின்னர் அவர் தனது செல்போனை எடுத்து, இந்த செல்போனும் பல பாவங்களை செய்துள்ளது. அதற்கும் புனிதம் தேவை என்று கூறுகிறார்.
மேலும் அந்த செல்போனை திரிவேணி சங்கமத்தில் 3 முறை முக்கி எடுத்து புனித நீராட்டும் காட்சிகள் உள்ளது. வைரலான இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரது செயலை விமர்சித்து பதிவிட்டனர்.
மகா கும்பமேளாவில் புனித நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.