என் மலர்
செய்திகள்
X
ஜீப் செரோக்கி எஸ்.யு.வி. அறிமுகம்: முழு தகவல்கள்
Byமாலை மலர்20 Dec 2017 4:01 PM IST (Updated: 20 Dec 2017 4:01 PM IST)
ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஜீப் செரோக்கி எஸ்.யு.வி. அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஃபியாட் க்ரிஸ்லர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஜீப் செரோக்கி எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்துள்ளது. 2018 டெட்ராய்ட் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய எஸ்.யு.வி. அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிரீமியம் ஸ்போர்ட் வடிவைப்பு மற்றும் ஸ்டைலிங் செய்யப்பட்டிருப்பதோடு பல்வேறு அம்சங்களும், அதிக மைலேஜ் வழங்கும் இன்ஜின் வழங்கப்படுகிறது. தற்போதைய மாடலுடன் ஒப்பிடும் போது புதிய செரோக்கி கிரான்ட் செரோக்கி மற்றும் புதிய காம்பஸ் மாடல்களுக்கு இடையே அமைந்துள்ளது.
புதிய எஸ்.யு.வி. மாடலின் தொழில்நுட்ப ரீதியிலான அம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. முழுமையான அறிமுகம் டெட்ராய்ட் ஆட்டோ விழாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்பு, பெரிய மற்றும் அழகிய ஹெட்லேம்ப் மற்றும் பகலில் எரியும் எல்இடி மின்விளக்குகள் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள் வழங்கப்படுகிறது.
வளைந்த மூக்கு பகுதியில் ஜீப் லோகோ மற்றும் ஏழு ஸ்லாட் கொண்ட கிரில் மற்றும் க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. முன்பக்க பம்ப்பர் புதிய வடிவமைப்பை கொண்டிருப்பதோடு, ஸ்போர்ட் தோற்றமளிக்க ஏதுவான கோடுகளும் இடம்பெற்றுள்ளது. அதன் ஏர் டேம் மெஷ் கிரிலுடன் இணைந்து கொள்வதோடு, பெரியதாகவும் உள்ளது.
பின்புறம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்ட டெயில் லேம்ப் கிளஸ்டர், மேம்படுத்தப்பட்ட பம்ப்பர், சில்வர் டிஃப்யூசர் மற்றும் டூயல் க்ரோம் எக்சாஸ்ட் மற்றும் ரூஃப்-மவுண்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் மற்றும் இன்டகிரேடெட் பிரேக் லைட் வழங்கப்படுகிறது. இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை ஜீப் காம்பஸ் மாடலை போன்று காட்சியளிக்கிறது. எனினும் சற்றே வித்தியாசமான டேஷ்போர்டு மற்றும் பெரிய ஏர் வென்ட், மேம்படுத்தப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் ஸ்டீரிங் வீல் வழங்கப்படுகிறது.
புதிய எஸ்.யு.வி. மாடலில் 2.0 லிட்டர் டர்போ சார்ஜ்டு டீசல் இன்ஜின் மற்றும் புதிய 2.4 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய மாடலின் டிரெயில்ஹாக் எடிஷன் மாடலும் வழங்கப்டும் என கூறப்படுகிறது. இத்துடன் ஜீப் செரோக்கி மாடலில் பெரிய அலாய் வீல், கீழ் பகுதி கிளாடிங் கருப்பு நிறத்திலும், பெரிய ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாடல் அடுத்த ஆண்டு இறுதியில் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Next Story
×
X