என் மலர்
செய்திகள்
X
டூயல் கேமரா கொண்ட முதல் சாம்சங் ஸ்மார்ட்போன் இதுதானா?
Byமாலை மலர்31 May 2017 4:41 PM IST (Updated: 31 May 2017 4:41 PM IST)
சீனாவில் இருந்து வரும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனத்தின் டூயல் பிரைமரி கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது ஏற்கனவே வெளியான தகவல்களுக்கு முரணாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பீஜிங்:
சாம்சங் நிறுவனத்தின் டூயல் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், டூயல் கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி சீனாவில் இருந்து வெளியாகியுள்ள தகவல்களில் சாம்சங் கேலக்ஸி ஜெ7 (2017) அந்நிறுவனத்தின் முதல் டூயல் கேமரா ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிவிக்கின்றன. முன்னதாக சாம்சங் கேலக்ஸி சி10 ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா வழங்கப்படும் என்றும் இதுவே சாம்சங்கின் முதல் டூயல் கேமரா போனாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சீனாவின் சமூக வலைத்தளமான வெய்போவில் சாம்சங் கேலக்ஸி ஜெ7 (2017) பிளாஸ்டிக் பேக் கவர் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள. இதில் கேலக்ஸி ஜெ7 (2017) ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா அமைப்பு வழங்கப்படுவது தெரியவந்துள்ளது. மேலும் வெய்போவில் கசிந்துள்ள புகைப்படங்கள் கேலக்ஸி ஜெ7 (2017) போனின் சீன பதிப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது.
முந்தைய தகவல்களில் சாம்சங் கேலக்ஸி ஜெ7 (2017) ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட கேமரா, ஸ்னாப்டிராகன் 425 அல்லது சாம்சங் எக்சைனோஸ் 7870 சிப்செட் 2 ஜிபி / 3 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் 12 எம்பி, 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்லது 12 எம்பி செல்ஃபி கேமரா, என்றும் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும். இத்துடன் ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஜெ7 (2017) ஸ்மார்ட்போன் விரைவில் சர்வதேச சந்தைகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
X