search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் திடீரென மாறிய வானிலை- குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை
    X

    புதுச்சேரியில் திடீரென மாறிய வானிலை- குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை

    • அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்படுகிறது.
    • லேசான மழை புதுச்சேரி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெயிலின் உக்கிரம் அதிகரிக்க தொடங்கியது.

    மதிய வேளைகளில் வெயில் சுட்டெரிக்கிறது. பகல் பொழுதுகளில் மக்கள் நடமாடவே அச்சப்படும் சூழ்நிலை உள்ளது. இதனிடையே வானிலை மையம் வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

    இந்த நிலையில் இன்று திடீரென ஒட்டுமொத்த வானிலையும் மாறியது. அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருண்டு காணப்படுகிறது. லேசான மழையும் பெய்தது. இதனால் குளர்ச்சியான சூழல் நிலவுகிறது. இது புதுச்சேரி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதனிடையே பூமத்திய ரேகையையொட்டி வடகிழக்கு இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்ககடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை ஏற்பட்டுள்ள தால் தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும் சில மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரி வானிலையிலும் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×