என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
வெற்றி தரும் விடலை பிள்ளையார்
- அவ்வையார், அகத்தியர், மனவாசம் கடந்த மாமுனிவர் உள்பட பலர் பூஜித்த தலம் இதுவாகும்.
- 1008, 108 தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் திருவதிகையில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் உள்ள விடலை விநாயகருக்கு தனி சன்னதி அமைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர். உலகத்திலேயே சூரைதேங்காய் எனும் விடலை தேங்காய் உடைக்கும் வைபவம் தோன்றிய தலமாக திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் அமைந்துள்ள விடலை விநாயகர் சன்னதி திகழ்கிறது.
இங்கு கோர்ட்டு வழக்கு, திருமண பிரார்த்தனை, பொருள் காணாமல் போனால் இங்கு வந்து வேண்டி கொண்டால் உடனே காரியம் சில நாட்களிலே நிறைவேறும். இங்கு 1008, 108 தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர்.
அமாவாசையை தொடர்ந்து வளர்பிறையில் வரும் சதூர்த்தி நாக சதூர்த்தியாகவும், பவுர்ணமி முடிந்து தேய்பிறையில் வரும் சதூர்த்தி சங்கடகர சதூர்த்தியாக விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவரான திருநாவுக்கரசர் சுவாமிகளை சமணர்கள் கொடுமைப்படுத்தியபோது அந்த சமணர்களை யானை உருக்கொண்டு துவம்சம் செய்ததும் இந்த விநாயகர் தான் என்று கூறப்படுகிறது.
ராஜாராஜசோழன் இந்த விநாயகரை வழிபட்டுள்ளார்.
ராமலிங்க சுவாமியும் இங்கு வந்து விநாயகரை வணங்கியுள்ளார். அவ்வையார், அகத்தியர், மனவாசம் கடந்த மாமுனிவர் உள்பட பலர் பூஜித்த தலம் இதுவாகும்.