என் மலர்
விளையாட்டு
- கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.
- இந்த வெற்றிக்கு 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய யுஸ்வேந்திர சாஹல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முல்லான்பூர்:
ஐபிஎல் தொடரின் நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய யுஸ்வேந்திர சாஹல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரது காதலியாக சொல்லப்படும் ஆர்.ஜே. மாவாஷ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் "என்ன ஒரு திறமையான மனிதர் இவர்! ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியதற்கு இதுவும் ஒரு காரணம்" என கூறியுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

பலரும் அவர்கள் இருவரும் காதலில் இருப்பது இந்த பதிவின் மூலம் உறுதியாகிவிட்டது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் சாஹல் 166 போட்டிகளில் விளையாடி 211 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். மேலும் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளரும் சாஹல் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய ஓபன் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.
- இதில் நாடு முழுவதும் இருந்து 400-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
சென்னை:
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், இந்திய ஓபன் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 14 வகையான பந்தயங்கள் நடைபெற்றன. இதில் நாடு முழுவதும் இருந்து 400-க்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய தமிழக வீராங்கனைகள் டாப்-3 இடங்களை வசப்படுத்தினர். நித்யா ராமராஜ் 13.32 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றார். கே.நந்தினி (13.58 வினாடி) 2-வது இடத்தையும், ஸ்ரீரேஷ்மா (13.99 வினாடி) 3-வது இடத்தையும் பிடித்தனர்.
400 மீட்டர் தடை ஓட்டத்தில் தமிழக வீராங்கனை வித்யா ராமராஜ் 56.90 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை சொந்தமாக்கினார். கேரள வீராங்கனை அனு (57.52 வினாடி) 2-வது இடத்தையும், தமிழக வீராங்கனை அஸ்வினி (1 நிமிடம் 01.27 வினாடி) 3-வது இடமும் பெற்றனர். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கிருத்திகா 11.87 வினாடியில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கேரளாவின் ஆர்த்ரா (12.07 வினாடி) 2-வது இடமும், பீகாரின் ஷதாக்ஷி ராய் (12.15 வினாடி) 3-வது இடமும் கைப்பற்றினர்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் ஆந்திர வீரர் ஷேக் முகைதீன் (2.08 மீட்டர்) முதலிடமும், தமிழக வீரர் முகேஷ் அசோக்குமார் (2.05 மீட்டர்) 2-வது இடமும், கடற்படை வீரர் பாரதி விஸ்வநாதன் (2.05 மீட்டர்) 3-வது இடமும் பெற்றனர். நீளம் தாண்டுதலில் உத்தரபிரதேசத்தின் ஆதித்யா குமார் சிங் (7.74 மீட்டர்) தங்கப்பதக்கத்தை வென்றார். ரெயில்வே வீரர் சுவாமி நாதன் (7.64 மீட்டர்) 2-வது இடமும், தமிழகத்தின் ஷரோன் ஜெஸ்டஸ் (7.54 மீட்டர்) 3-வது இடமும் பிடித்தனர். டிரிபிள் ஜம்பில் தமிழகத்தின் கெய்லி வெனிஸ்டர் 15.64 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
- நடிகை சாகரிகா கட்கேவை கடந்த 2017-ம் ஆண்டு ஜாகீர் கான் திருமணம் செய்து கொண்டார்.
- 2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் ஜாகீர் கான்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் ஜாகீர் கான். 2000-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக கங்குலி தலைமையின் கீழ் அறிமுகமான ஜாகீர் கான், 2014-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார்.
இவர் இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளையும், 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளையும் வீழ்த்தியவர். 2011-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் ஜாகீர் கான்.
இவர் நடிகை சாகரிகா கட்கேவை கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணம் முடிவடைந்து 8 ஆண்டுகள் கடந்த நிலையில், இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அறிவித்துள்ளனர். அந்த குழந்தைக்கு ஃபடேசின் கான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தம்பதியினருக்கு கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் என்று அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
வழக்கமாக கிரிக்கெட் வீரர்கள் தங்களின் கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் போதுதான் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் ஜாகீர் கான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரே திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் மிகவும் மோசமாக பேட் செய்தோம்.
- தொடரில் இன்னும் பாதி மீதமுள்ளது. அதில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய கேகேஆர் அணி எளிதான வெற்றியைப் பதிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஞ்சாப் கிங்ஸின் அபாரமான பந்துவீச்சின் காரணமாக அந்த அணி 15.1 ஓவர்களிலேயே வெறும் 95 ரன்களுக்கே ஆல் அவுட்டானது.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இந்நிலையில், இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் தானே ஏற்பதாக கேகேஆர் அணி கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்த போட்டி குறித்து விளக்க ஒன்றுமில்லை. அங்கே என்ன நடந்தது என்பதை நாங்கள் அனைவரும் பார்த்தோம். எங்களுடைய முயற்சியில் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அதனால் இந்த தோல்விக்கான முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
இந்த போட்டியில் தவறான ஷாட்டை விளையாடி ஆட்டமிழந்தேன். மேற்கொண்டு அதற்கு நான் மேல்முறையீடு செய்யாமலும் இருந்தது ஆட்டத்தின் திருப்பு முனையாக அமைந்தது.
ஏனெனில் எனக்கு உறுதியாக தெரியாததன் காரணமாக நான் அந்த முடிவை எடுத்திருந்தேன். ஒரு பேட்டிங் யூனிட்டாக நாங்கள் மிகவும் மோசமாக பேட் செய்தோம். நாங்கள் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறோம்.
பந்து வீச்சாளர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். வலுவான பஞ்சாப் பேட்டிங் வரிசையை 111 ரன்களில் கட்டுப்படுத்தினர்.
இந்த போட்டியில் நாங்கள் பொறுப்பற்றவர்களாக இருந்தோம். முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் இது எங்களுக்கு எளிதான சேசிங்காக இருந்திருக்க வேண்டும். அதனால் நான் முதலில் இந்த தோல்வியில் இருந்து என்னை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும், பின்னர் அணி வீரர்களிடம் என்ன சொல்வது என்று யோசிக்க வேண்டும். தொடரில் இன்னும் பாதி மீதமுள்ளது. அதில் சிறப்பாக செயல்பட வேண்டும்.
என்று ரகானே கூறினார்.
- ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் கொல்கத்தா- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதியது.
- இந்த போட்டியில் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் 112 ரன் இலக்கை கூட தொட முடியாமல் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணி 95 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.
இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் இதுதான் ஒரு அணிக்கு குறைந்த ஸ்கோரை இலக்காக வைத்து கிடைத்த வெற்றியாகும்.

இதற்கு முன்பு சென்னை அணி 2009-ம் ஆண்டில் பஞ்சாப்புக்கு எதிராக 117 ரன்னை இலக்காக நிர்ணயித்து அதில் 24 ரன் வித்தியாசத்தில் வென்றதே, குறைந்த இலக்கில் கிடைத்த வெற்றியாகும். அந்த 16 ஆண்டுகால சாதனையை பஞ்சாப் முறியடித்தது.
- சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் உள்ள ஜியாமென் நகரில் வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது.
- இதில் நடப்பு சாம்பியன் சீனா, இந்தோனேசியா, இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.
புதுடெல்லி:
சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவில் உள்ள ஜியாமென் நகரில் வருகிற 27-ந் தேதி முதல் மே 4-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் சீனா, இந்தோனேசியா, இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் இந்திய அணி 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவில் முன்னாள் சாம்பியன் இந்தோனேசியா, 2 முறை 2-வது இடம் பிடித்த டென்மார்க், வலுவான இங்கிலாந்து ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும். ஒவ்வொரு போட்டியிலும் ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய 5 பிரிவுகளில் ஆட்டம் நடைபெறும்.
சுதிர்மான் கோப்பை போட்டிக்கான இந்திய பேட்மிண்டன் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக இரட்டையர் பிரிவு இணையான காயத்ரி கோபிசந்த், திரிஷா ஜாலி அணியில் இடம் பெறவில்லை. காயத்தில் இருந்து மீண்ட சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி இணை அணிக்கு திரும்பி இருக்கிறது.
இந்திய அணி வருமாறு:-
லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய் (ஆண்கள் ஒற்றையர்), பி.வி.சிந்து, அனுபமா உபாத்யாய் (பெண்கள் ஒற்றையர்), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, ஹரிகரன் அம்சகருணன்-ரூபன் குமார் (ஆண்கள் இரட்டையர்), ஸ்ருதி மிஸ்ரா- பிரியா (பெண்கள் இரட்டையர்), தனிஷா கிரஸ்டோ- துருவ் கபிலா, ஆத்யா வரியாத்-சதீஷ் குமார் (கலப்பு இரட்டையர்).
- ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின.
- பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நியூசண்டிகர்:
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - கொல்கத்தா அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 111 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து விளையாடிய கொல்கத்தா 95 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் வெற்றி பெற முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யசுவேந்திர சாஹல். அவர் 4 ஓவர் வீசி 28 ரன் கொடுத்து 4 விக்கெட் சாய்த்தார்.
ஐ.பி.எல். வரலாற்றில் சாஹல் 8-வது முறையாக 4 விக்கெட்டை தொட்டுள்ளார். இதன் மூலம் அவர் சுனில் நரைன் சாதனையை சமன் செய்தார். சுனில் நரைன் 8 தடவை 4 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.
அதற்கு அடுத்தப்படியாக மலிங்கா 7 தடவையும், ரபடா 6 முறையும் 4 விக்கெட் எடுத்துள்ளார்கள்.
இந்த ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் சுனில் நரைன் 2 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலம் ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் கைப்பற்றியவர் என்ற சாதனையை புரிந்தார். அவர் பஞ்சாப்புக்கு எதிராக 36 விக்கெட் சாய்த்தார். இதற்கு முன்பு உமேஷ் யாதவ் 35 விக்கெட் (பஞ்சாப்புக்கு எதிராக) வீழ்த்தி இருந்தார்.
- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 2 வெற்றி, 4 தோல்வி என 4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது.
- இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது.
லக்னோ, ஐதராபாத், சென்னை, பெங்களூரு ஆகிய அணிகளை வரிசையாக வீழ்த்தி வீறுநடை போட்ட டெல்லி அணி, சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் மும்பையிடம் வீழ்ந்து முதல் தோல்வியை சந்தித்தது.
மும்பைக்கு எதிராக 206 ரன் இலக்கை நோக்கி ஆடிய அந்த ஆட்டத்தில் டெல்லி அணி ஒரு கட்டத்தில் (11.3 ஓவரில்) 2 விக்கெட்டுக்கு 135 ரன் எடுத்து வலுவான நிலையில் இருந்தது. அதன் பிறகு வேகமாக விக்கெட்டுகளை இழந்து 193 ரன்னில் 'ஆல்-அவுட்' ஆகி வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது.
டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அபிஷேக் போரெல், கருண் நாயர், அஷூதோஷ் ஷர்மா உள்ளிட்டோர் நம்பிக்கை அளிக்கின்றனர். தொடக்க ஆட்டக்காரர் பிராசர் மெக்குர்க் தொடர்ந்து சொதப்புவதால் அவருக்கு பதிலாக பிளிஸ்சிஸ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. பந்து வீச்சில் குல்தீப் யாதவ், மிட்செல் ஸ்டார்க், விப்ராஜ் நிகம், முகேஷ் குமார் கைகொடுக்கிறார்கள்.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 2 வெற்றி (சென்னை, பஞ்சாப்புக்கு எதிராக), 4 தோல்வி (ஐதராபாத், கொல்கத்தா, குஜராத், பெங்களூரு அணிகளிடம்) என 4 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் இருக்கிறது. முதல் 2 ஆட்டத்தில் தோல்வி, அடுத்த 2 ஆட்டங்களில் வெற்றி, அதற்கு அடுத்த 2 ஆட்டங்களில் தோல்வி என்று நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ராஜஸ்தான் அணியில் பேட்டிங்கில் கேப்டன் சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரெல், ஹெட்மயர், நிதிஷ் ராணா என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. ஆனால் ஒரு சேர 'கிளிக்' ஆகாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. பந்து வீச்சில் ஹசரங்கா, தீக்ஷனா, துஷர் தேஷ்பாண்டே, சந்தீப் ஷர்மா, ஜோப்ரா ஆர்ச்சர் வலுசேர்க்கின்றனர்.
மீண்டும் வெற்றிப் பாதையில் தடம்பதிக்க இரு அணிகளும் வரிந்து கட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 15-ல் ராஜஸ்தானும், 14-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- கொல்கத்தா அணியில் பந்துவீச்சாளராக சுனில் நரைன் விளையாடி வந்தார்.
- நரைனிடம் இருந்த பேட்டிங் திறமையை கொல்கத்தா அணி கண்டுபிடித்தது.
ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் பேட்டிங் செய்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் பந்துவீச்சாளராக விளையாடி வந்த சுனில் நரைன் கடைசி வரிசையில் தான் ஆரம்ப கட்டத்தில் பேட்டிங் செய்து வந்தார். பின்னர் அவரிடம் இருந்த பேட்டிங் திறமையை கண்டுபிடித்த கொல்கத்தா அணி நிர்வாகம் அவரை முன்வரிசையில் பேட்டிங் செய்ய அனுப்பியது.
இந்த முடிவு கொல்கத்தா அணிக்கு நல்ல முடிவை கொடுத்தது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய சீனில் நரேன் அதிரடியாக ரன்களை குவித்து கொல்கத்தா அணியில் வெற்றிக்கு பெரிதும் உதவினார்.
பின்னர் அடுத்தடுத்த சீசன்களில் அவரது பேட்டிங் அணிக்கு கைகொடுக்கத்தால் அவர் நடுவரிசையிலும் பின்வரிசையிலும் களமிறக்கப்பட்டார்.
அவ்வகையில் ஐபிஎல் தொடரில் சுனில் நரேன், 15 முறை முதல் வரிசையிலும், 45 முறை 2 ஆம் வரிசையிலும் பேட்டிங் செய்துள்ளார். மேலும், அவர் ஆறாவது மற்றும் மூன்றாம் வரிசையில் தலா ஒரு முறையும் நான்காம் வரிசையில் 8 முறையும் ஐந்தாவது வரிசையில் ஏழு முறையும் பேட்டிங் செய்துள்ளார்.
- 112 ரன்களை அடிக்கமுடியாமல் 95 ரன்களுக்கு சுருண்டு கொல்கத்தா அணி தோல்வி
- கடந்தாண்டு கொல்கத்தா நிர்ணயித்த 262 ரன்கள் என்ற இலக்கை பஞ்சாப் அணி சேஸ் செய்து சாதனை படைத்திருந்தது
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதலில் பேட்டிங் மிக குறைந்த ஸ்கோரை அடித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.
கடந்தாண்டு இதே கொல்கத்தா அணிக்கு எதிராக ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஸ்கோரை சேஸ் செய்து பஞ்சாப் கிங்ஸ் அணி சாதனை படைத்திருந்தது. கொல்கத்தா அணி நிர்ணயித்த 262 ரன்கள் என்ற இமாலய இலக்கை 18.4 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி சேஸ் செய்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 112 ரன்களை அடிக்கமுடியாமல் 95 ரன்களுக்கு சுருண்டு கொல்கத்தா அணி தோல்வி
- 16 ஆண்டுகளுக்கு சி.எஸ்.கே. அணியின் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் முறியடித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதலில் பேட்டிங் மிக குறைந்த ஸ்கோரை அடித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் படைத்துள்ளது.
இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 116 ரன்கள் அடித்து வெற்றி பெற்றிருந்ததே சாதனையாக இருந்தது. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு சி.எஸ்.கே. அணியின் சாதனையை பஞ்சாப் கிங்ஸ் முறியடித்துள்ளது.
- டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
- கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 37 ரன்கள் எடுத்தார்.
ஐபிஎல் தொடரின் இன்றைய 31-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 15.3 ஓவரில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 30 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி தரப்பில் ஹர்சித் ராணா 3, சுனில் நரைன், வருண் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதனையடுத்து 112 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி வீரர்கள் டி காக் 2 ரன்களும், நரைன் 5 ரன்களும், ரஹானே 17 ரன்களும், ரகுவன்ஷி 37 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில் கொல்கத்தா அணி 15.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தியது.