search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயம் காரணமாக சிலிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்சி விளையாடுவது சந்தேகம்
    X

    காயம் காரணமாக சிலிக்கு எதிரான ஆட்டத்தில் மெஸ்சி விளையாடுவது சந்தேகம்

    நாளை நடைபெற இருக்கும் சிலிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி காயம் காரணமாக பங்கேற்பது சந்தேகம் என கூறப்பட்டுள்ளது.
    தென்அமெரிக்கா நாடுகள் பங்கேற்கும் ‘கோபா அமெரிக்கா’ கால்பந்து தொடர் தொடங்கி 100 வருடம் ஆகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வருடம் சிறப்பு கோபா அமெரிக்க கால்பந்து தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது.

    தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த தொடரில் இன்று ஓய்வு நாளாகும். நாளை இரண்டு போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி அதிகாலை 4.00 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியில் பனமா- பொலிவியா அணிகள் மோதுகின்றன.

    மற்றொரு போட்டி காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் பலம்பொருந்திய அர்ஜென்டினா- சிலி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சிலி கடந்த வருடம் நடைபெற்ற கோபா அமெரிக்கா தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது.

    அர்ஜென்டினா அணியில் நட்சத்திர விரர் மெஸ்சி இடம்பிடித்துள்ளார். நாளை மெஸ்சி ஆட்டத்தை காணலாம் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சம் என்று தெரிகிறது.

    மெஸ்சி கடந்த 10 நாட்களுக்கு முன் நட்பு ரீதியான போட்டியில் ஹோண்டுராஸ் அணிக்கெதிராக விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் இன்னும் சரியாகாததால் மெஸ்சி நாளைக்கு விளையாடமாட்டார் எனறு தெரிகிறது. அவருக்குப் பதிலாக நிக்கோலஸ் கெய்டன் களம் இறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
    Next Story
    ×