என் மலர்
செய்திகள்
X
மிகப்பெரிய பொறுப்பு மிக்க பதவியை ஏற்க தயாராக உள்ளேன்: கும்ப்ளே
Byமாலை மலர்23 Jun 2016 7:29 PM IST (Updated: 23 Jun 2016 7:29 PM IST)
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கும்ப்ளே, மிகப்பெரிய பொறுப்புமிக்க பதவியை ஏற்க தயாராக உள்ளேன் என்று கூறியள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளேயை பி.சி.சி.ஐ. இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கும்ப்ளேவிற்கும், ரவி சாஸ்திரிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. பின்னர் அனில் கும்ப்ளே இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
பி.சி.சி.ஐ. அவரை தலைமை பயிற்சியாளராக நியமித்தது குறித்து கும்ப்ளே கூறுகையில் ‘‘இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் என்ற மிகப்பெரிய பொறுப்புமிக்க பதவியை ஏற்க உள்ளேன். மீண்டும் இந்திய அணியின் வீரர்கள் அறைக்குச்செல்ல இருப்பது மிகப்பெரிய கௌரவம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் வெற்றிக்காக அதிக அளவில் பாடுபட்டவர் கும்ப்ளே. இந்தியாவிற்கா 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். சர்வதேச அளவில் மூன்றாவது அதிகபட்ச விக்கெட்டாகும் (முரளீதரன் 800, வார்னே 708). அத்துடன் டெல்லியில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சாதனைப்படைத்தவர். 35 முறை ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். அத்துடன் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்கள் அடித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக முதல்தர போட்டிகளில் 1136 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். 1995-ம் ஆண்டு அர்ஜூனா விருதையும், 2016-ம் ஆண்டு சிறந்த வீரருக்கான விஸ்டன் கிரிக்கெட்டர் என்ற விருதையும் பெற்றுள்ளார்.
2012-ம் ஆண்டு ஐ.சி.சி. இவரை ஐ.சி.சி. கிரிக்கெட் கமிட்டியின் சேர்மனாக நியமித்தது. தற்போது வரை அந்த பதவியில் நீடித்து வருகிறார். 1990-ல் இருந்து 2008-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 18 வருடங்கள் விளையாடியவர்.
இந்திய அணியின் கேப்டனாக இருந்து பெர்த் மைதானத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முத்திரை படைத்தார். 2002-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது பேட்டிங் செய்யும்போது தடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. காயத்திற்கு கட்டுப்போட்டுக்கொண்டு பந்து வீசி லாராவின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

Next Story
×
X