என் மலர்
செய்திகள்
X
இரட்டை சதம் அடித்தது மிகவும் திருப்தியாக உள்ளது: விராட் கோலி
Byமாலை மலர்23 July 2016 4:22 PM IST (Updated: 23 July 2016 4:22 PM IST)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக நேற்று ஆன்டிகுவாவில் அடித்த இரட்டை சதம் மிகவும் திருப்திகரமாக உள்ளது என்று விராட் கோலி கூறியுள்ளார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி 21-ந்தேதி (நேற்றுமுன்தினம்) ஆன்டிகுவாவில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 566 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. விராட் கோலி இரட்டை சதம் அடித்தார். அவர் சரியாக 200 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் சதமும், அமித் மிஸ்ரா அரைசதமும் அடித்தனர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலிக்கு கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் முதல் இரட்டை சதம் ஆகும். அதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட இரட்டை சதம் அடித்தது கிடையாது.
இந்த போட்டியில் இரட்டை சதம் அடித்தது மிகவும் திருப்தியாக உள்ளது என்று விராட் கோலி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில் ‘‘இது மிகவும் சிறந்ததாக உணர்கிறேன். நான் கடந்த 2012-ல் இங்குதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானேன். அப்போது அது எனக்கு மறக்கமுடியாத தொடராக அமையவில்லை.
மீண்டும் வெஸ்ட் இண்டீசுக்கு விளையாட வந்து இரட்டை சதம் அடித்தது மிகப்பெரிய திருப்தி. ஏனெனில், நான் கடந்த காலங்களில் மிகப்பெரிய ஸ்கோரை எட்டியது கிடையாது.
மிப்பெரிய சதம் அடிக்கக்கூடிய திறமை என்னிடம் உள்ளது என்பது எனக்குத் தெரியும். முதல் தர போட்டிகளில் இது என்னுடைய முதல் இரட்டை சதம். இதுபோல் பெரிய சதம் அடிக்க வேண்டும் என்று விரும்பினேன். தற்போது இரட்டை சதம் அடித்துள்ளதால் இந்த உணர்வு மிகவும் சிறப்பான இருக்கிறது. இந்த இலக்கையும் தாண்ட முடியும்.’’ என்றார்.

Next Story
×
X