என் மலர்
செய்திகள்
X
பயிற்சியாளர் பதவிக்கு அச்சாரம்: கிரிக்கெட் அகாடமியில் இணைகிறார் டோனி
Byமாலை மலர்23 July 2016 6:18 PM IST (Updated: 23 July 2016 6:18 PM IST)
ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்டெர்மோட் கிரிக்கெட் அகாடமி தொடங்கியுள்ளார். இதற்கு டோனி விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிரேக் மெக்டெர்மோட். இவர் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்கியுள்ளார். நான்கு வருட படிப்பான இந்த அகாடமியில் விளையாட்டு அறிவியல் மற்றும் நிர்வாகம் குறித்து கற்றுக்கொடுக்கப்படும்.
இந்த அகாடமியை துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளில் பிரபலமடையச் செய்ய மெக்டெர்மோட் விரும்பினார். இதனால் அவர் டோனியை விளம்பர தூதராக நியமித்துள்ளார். இதனால் இவர் மெக்டெர்மோட் உடன் இணைந்து இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்க இருக்கிறார்.
இதுகுறித்து டோனி கூறுகையில் ‘‘கிரிக்கெட்டில் நான் மீண்டும் வருவதற்கு ஏதாவது இருந்தால், இது எனக்கு சரியான அடித்தளமாக இருக்கும். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் காட்டும் சிறுவர்களுக்கு படிப்பு மற்றும் விளையாட்டு ஆகியவற்றை சரிசமமாக அளிக்க இந்த அகாடமி உதவியாக இருக்கும் என்பது முக்கியமான விஷயம். அறிவார்ந்த இளைஞர்கள், விளையாட்டிலும் சிறந்து விளங்க இது ஒன்றுதான் சரியானதாக இருக்கும்’’ என்றார்.
மீண்டும் கிரிக்கெட்டுக்கு வருவது குறித்து டோனி இவ்வாறு கூறியதன்மூலம், ஓய்விற்குப் பின் பயிற்சியாளருக்கான தகுதிகளை வளர்த்துக் கொண்டு சர்வதேச அணிக்கு பயிற்சியாளர் ஆகும் நோக்கம் இருக்கலாம் என தெரிகிறது.

Next Story
×
X