என் மலர்
செய்திகள்
X
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி: தொடரில் 2-0 என முன்னிலை
Byமாலை மலர்28 Aug 2016 3:20 PM IST (Updated: 28 Aug 2016 3:20 PM IST)
பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 49.5 ஓவர்கள் முடிவில் 251 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் சர்பிராஸ் அஹமது 105 ரன்னும், இமாத் வாசிம் அவுட்டாகாமல் 63 ரன்னும் அடித்தனர்.
பின்னர் இங்கிலாந்து அணி 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராயும், அலெக்ஸ் ஹேல்சும் களம் இறங்கினார்கள். ராய் ஆட்டத்தின் 2-வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். ஹேல்ஸ் 14 ரன்கள் எடுத்த நிலையில் இமாத் வாசிம் பந்தில் ஸ்டம்பை பறிக்கொடுத்தார்.
3-வது விக்கெட்டுக்கு ஜோ ரூட் உடன் கேப்டன் மோர்கன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசம் அடித்தனர். ஜோ ரூட் 89 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். மோர்கன் 68 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ஆல் ரவுண்டன் பென் ஸ்டோக்ஸ் 30 பந்தில் 42 ரன்கள் குவிக்க இங்கிலாந்து அணி 47.3 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 89 ரன்கள் குவித்த ரூட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
ஏற்கனவே ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்ததால், இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது. 3-வது ஒருநாள் போட்டி 30-ந்தேதி நாட்டிங்காமில் நடைபெற இருக்கிறது.

Next Story
×
X