என் மலர்
செய்திகள்
X
டி.என்.பி.எல்.: காரைக்குடி காளைக்கு 196 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
Byமாலை மலர்28 Aug 2016 4:20 PM IST
காரைக்குடி காளை அணியின் வெற்றிக்கு 196 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் ஐந்தாவது போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது. மதியம் 2.30 மணிக்கு தொடங்கிய இதில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் - காரைக்குடி காளை அணிகள் மோதி வருகின்றன.
டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் விக்கெட் கீப்பர் கோபிநாத், தலைவன் சற்குணம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்கள்.
இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 3.1 ஓவரில் 27 ரன் எடுத்திருக்கும்போது சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முதல் விக்கெட்டை இழந்தது. சற்குணம் 13 பந்தில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து சரவணன் களம் இறங்கினார். இவர் 12 பந்தில் 16 ரன்கள் சேர்த்தார். அதன்பின் வந்த மகேஷ் தன் பங்கிற்கு 16 பந்தில் 13 ரன்கள் எடுத்தார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கோபிநாத் 26 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 43 ரன்கள் சேர்த்தார்.
5-வது வீரராக களம் இறங்கிய கேப்டன் ராஜகோபால் சதீஷ் அதிரடியாக விளையாடினார். அவருக்குத் துணையாக அந்தோணி தாசும் விரைவாக ரன்கள் சேர்த்தார். சதீஷ் 22 பந்தில் 46 ரன்கள் சேர்த்து க்ளீன் போல்டானார். அப்போது சென்னை சூப்பர் கில்லிஸ் அணி 19 ஓவரில் 190 ரன்கள் சேர்த்திருந்தது.
கடைசி ஓவரில் ஓவரில் மூன்று விக்கெட்டுக்களை இழந்து ஐந்து ரன்களே எடுத்தால், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்துள்ளது. அந்தோணி தாஸ் 10 பந்தில் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரியுடன் 18 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். காரைக்குடி காளை அணி சார்பில் சோனு யாதவ் 4 வி்க்கெட்டும், ராஜ்குமார் 2 விக்கெட்டும் வீழ்த்தனார்கள்.
196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காரைக்குடி காளை அணி பேட்டிங் செய்து வருகிறது.

Next Story
×
X