search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது போட்டி தொடர்: புட்சால் கால்பந்தில் 8 அணிகள் பங்கேற்பு
    X

    2-வது போட்டி தொடர்: புட்சால் கால்பந்தில் 8 அணிகள் பங்கேற்பு

    அடுத்த ஆண்டு நடைபெறும் 2-வது புட்சால் கால்பந்தில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இவை 4 நகரங்களில் போட்டி நடக்கிறது.
    5 வீரர்கள் உள்விளையாட்டு அரங்கில் ஆடும் புட்சால் கால்பந்து போட்டி கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. 6 அணிகள் பங்கேற்ற இந்தப்போட்டியில் மும்பை சாம்பியன் பட்டம் பெற்றது. ரொனால்டினோ, கிரெஸ்போ போன்ற முன்னணி வீரர்கள் இதில் விளையாடினார்கள்.

    அடுத்த ஆண்டு நடைபெறும் 2-வது புட்சால் கால்பந்தில் 8 அணிகள் பங்கேற்கின்றன. 4 நகரங்களில் போட்டி நடக்கிறது. முதல் போட்டி தொடர் சென்னை, கோவா ஆகிய 2 இடங்களில் மட்டுமே நடக்கிறது.

    போட்டியில் பங்கேற்கும் அணிகள், போட்டி விவரம் பற்றி அடுத்த மாதம் அறிவிக்கப்படும். அடுத்த ஆண்டில் இருந்து வருடத்திற்கு 2 முறை புட்சால் கால்பந்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
    Next Story
    ×