என் மலர்
செய்திகள்
X
பெடரரை முந்தி செரீனா வில்லியம்ஸ் புதிய சாதனை
Byமாலை மலர்6 Sept 2016 12:43 PM IST (Updated: 6 Sept 2016 12:43 PM IST)
கிராண்ட்சிலாம் போட்டிகளில் அதிக முறை வெற்றி பெற்றிருந்த ரோஜர் பெடரரை முந்தி செரீனா வில்லியம்ஸ் புதிய சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் 4-வது சுற்று ஆட்டத்தில் கஜகஸ்தான் வீராங்கனையை வீழ்த்தினார். செரீனா வில்லியம்ஸ் பெற்ற 308-வது கிராண்ட்சிலாம் வெற்றியாகும். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்தார். அவர் ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) முந்தி அதிக கிராண்ட்சிலாம் ஆட்டத்தில் வென்றவர் என்ற சாதனையை புரிந்தார்.
பெடரர் கடந்த மாதம் 8-ந் தேதிதான் தனது 35-வது வயதை அடைந்தார். செரீனா வருகிற 26-ந்தேதி தனது 35-வது வயதை அடைகிறார். தனது 16-வது வயதில் செரீனா முதல் கிராண்ட்சிலாம் ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.
பெடரர் கடந்த மாதம் 8-ந் தேதிதான் தனது 35-வது வயதை அடைந்தார். செரீனா வருகிற 26-ந்தேதி தனது 35-வது வயதை அடைகிறார். தனது 16-வது வயதில் செரீனா முதல் கிராண்ட்சிலாம் ஆட்டத்தில் வெற்றி பெற்றார்.
Next Story
×
X