என் மலர்
செய்திகள்
X
ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: காயத்தால் நியூசி. தொடரில் விளையாடாத டி வில்லியர்ஸ் இடம்பெற்றார்
Byமாலை மலர்6 Sept 2016 6:20 PM IST (Updated: 6 Sept 2016 6:20 PM IST)
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் டி வில்லியர்ஸ் இடம்பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக டி வில்லியர்ஸ் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், கேப்டனுமான டி வில்லியர்ஸ் தோள்பட்டை காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெறவில்லை. வரும் 30-ந்தேதி முதல் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.
இதற்கான தென் ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடரில் இடம்பெறாமல் இருந்த டி வில்லியர்ஸ் தற்போதைய அணியில் இடம்பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஏபி டி வில்லியர்ஸ் (கேப்டன்), 2. கைல் அபாட், 3. ஹசிம் அம்லா, 4. பர்ஹான் பெஹார்டியன், 5. குயின்டான் டி காக், 6. ஜேபி டுமினி, 7. டு பிளிசிஸ், 8. இம்ரான் தாஹிர், 9. டேவிட் மில்லர், 10. கிறிஸ் மோரிஸ், 11. வெயின் பர்னெல், 12. ஆரோன் பாங்கிசோ, 13. அன்டில் பெலுக்வாயோ, 14. தப்ரைஸ் ஷாம்சி, 15. டேல் ஸ்டெயின், 16. காகிசோ ரபாடா.
வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற முத்தரப்பு தொடரின்போது வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல், பேட்ஸ்மேன் ரிலே ரோசௌவ் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரது பெயரும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
கடந்த வாரம் ஆஸ்திரேலியாவில் முடிவடைந்த நான்கு அணிகளுக்கு இடையிலான தொடரில் தென் ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் அன்டில் பெலுக்வாயோ 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தியிருந்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா அணியில் புதுமுக வீரராக இடம்பிடித்துள்ளார்.
செப்டம்பர் 30-ந்தேதி முதல் ஒருநாள் போட்டியும், அக்டோபர் 2-ந்தேதி 2-வது போட்டியும், 5-ந்தேதி 3-வது போட்டியும், 9-ந்தேதி 4-வது போட்டியும், 12-ந்தேதி 5-வது போட்டியும் நடக்க இருக்கிறது.

Next Story
×
X