என் மலர்
செய்திகள்
X
லோதா குழு பரிந்துரையை அமல்படுத்தினால் கிரிக்கெட் வாரியத்துக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும்: அனுராக் தாக்கூர்
Byமாலை மலர்3 Oct 2016 10:18 AM IST (Updated: 3 Oct 2016 10:18 AM IST)
ஐ.பி.எல். தொடர்பாக லோதா குழுவின் பரிந் துரையை அமல்படுத்தினால் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 100 கோடி இழப்பு ஏற்படும் என அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்
கொல்கத்தா:
ஐ.பி.எல். சூதாட்ட பிரச்சினையை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி. சி.ஐ.) நிர்வாக அமைப்பில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழு ஆய்வு செய்து தனது பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்பித்தது.
ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிர்வாகிகளாக செயல்படக்கூடாது, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், பி.சி.சி.ஐ.யில் செயல்படக்கூடாது உள்பட பல்வேறு அதிரடியான பரிந்துரைகள் அதில் இடம் பெற்று இருந்தது.
பி.சி.சி.ஐ.யை ஆட்டம் காணும் வகையிலான இந்த பரிந்துரைக்கு நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் லோதா குழு பரிந்துரையை பி.சி.சி.ஐ. அமல்படுத்தாமல் இருந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் பி.சி.சி. ஐ.க்கு கடும் கண்டனம் தெரிவித்தது. வருகிற 6-ந்தேதி பிற்பகலுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டு கண்டனத்துக்கு பிறகும் லோதா குழு பரிந்துரையை அமல்படுத்த பி.சி.சி.ஐ. மறுத்து விட்டது. ஒருசில பரிந்துரையை ஏற்றது. பெரும்பாலான பரிந்துரையை நிராகரித்தது.
இதற்கிடையே லோதா குழு பரிந்துரையை அமல்படுத்தினால் கிரிக்கெட் வாரியத்துக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அதன் தலைவர் அனுராக் தாக்கூர் அச்சம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் இதுகுறித்து கூறியதாவது:-
ஐ.பி.எல். தொடர்பாக லோதா குழுவின் பரிந்துரையை அமல்படுத்தினால் கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ. 100 கோடி இழப்பு ஏற்படும்.
தேசிய போட்டி அட்டவணைக்கும், ஐ.பி.எல்.லுக்கும் இடையேயான இடைவெளி 15 தினங்கள் இருக்க வேண்டும் என்ற பரிந்துரையும் உள்ளது. இதை அமல்படுத்தினால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படும். ஐ.பி.எல். மூலம் கிடைக்கும் வருமானம் முன்னாள் வீரர்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னாள் வீரர்களுக்கு ரூ.110 கோடி வரை வழங்கி இருக்கிறோம்.
சர்வதேச போட்டி அட்டவணையில் ஐ.பி.எல். இடம் பெற்றால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு இழப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story
×
X