என் மலர்
செய்திகள்
X
உலக கோப்பை கபடி: ஈரான் அணி ஹாட்ரிக் வெற்றி
Byமாலை மலர்13 Oct 2016 1:27 PM IST (Updated: 13 Oct 2016 1:27 PM IST)
உலக கோப்பை கபடி போட்டியில் ஈரான் அணி 33-28 என்ற புள்ளி கணக்கில் கென்யாவை வீழ்த்தியதன் மூலம் அந்த அணி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.
ஆமதாபாத்:
3-வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. ‘பி’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் ஈரான்- கென்யா அணிகள் மோதின. இதில் ஈரான் 33-28 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. அந்த அணி ஹாட்ரிக் வெற்றியை பெற்றது.
ஈரான் அணி ஏற்கனவே 52-15 என்ற கணக்கில் அமெரிக்காவையும், 62-43 என்ற கணக்கில் தாய்லாந்தையும் வீழ்த்தி இருந்தன. இதன் மூலம் 15 புள்ளிகளுடன் அந்த அணி முதல் இடத்தில் இருக்கிறது.
ஏ பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 68-45 என்ற கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது. ஆஸ்திரேலியா பெற்ற முதல் வெற்றியாகும். இன்று நடைபெறும் ஆட்டங்களில் வங்காளதேசம்- தென்கொரியா, தாய்லாந்து- கென்யா அணிகள் மோதுகின்றன.

Next Story
×
X