search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக கோப்பை கபடி: இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்
    X

    உலக கோப்பை கபடி: இந்தியா-இங்கிலாந்து இன்று மோதல்

    உலக கோப்பை கபடி போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன.

    ஆமதாபாத்:

    3-வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. 2 முறை சாம்பியனான இந்திய அணி கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை இன்று இரவு 9 மணிக்கு சந்திக்கிறது.

    இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது வெற்றியை பெற்று அரை இறுதிக்குள் நுழையும் ஆர்வத்தில் உள்ளது. ‘ஏ’ பிரிவில் உள்ள இந்தியா 16 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. தென் கொரியாவிடம் தோற்று இருந்தது. ஆஸ்திரேலியா, வங்காளதேசம், அர்ஜென்டினாவை வீழ்த்தி இருந்தது. இந்த பிரிவில் தென்கொரியா 25 புள்ளியுடன் அரை இறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்று விட்டது.

    முன்னதாக இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள கென்யா- அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    நேற்று நடந்த ஆட்டங்களில் போலந்து 41-25 என்ற கணக்கில் ஈரானை அதிர்ச்சிகரமாக வீழ்த்தியது. ஈரான் ஏற்கனவே அரை இறுதிக்கு முன்னேறி இருந்தது. மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம் 80-8 என்ற புள்ளிக் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை வெற்றி பெற்றது.

    Next Story
    ×