என் மலர்
செய்திகள்
X
மோசமான தோல்வி எதிரொலி: ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம்
Byமாலை மலர்21 Nov 2016 11:00 AM IST (Updated: 21 Nov 2016 11:00 AM IST)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்டில் மோசமான தோல்வி எதிரொலியால் ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதில் 3 புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அடிலெய்ட்:
டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்கா முதல் இரண்டு டெஸ்டிலும் வென்று தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா மண்ணில் அந்த அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக தொடரை வென்று புதிய வரலாறு படைத்தது.
பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் 177 ரன் வித்தியாசத்திலும், ஹோபர்ட்டில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 80 ரன் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலியா மோசமாக தோற்றது. இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 24-ந் தேதி அடிலெய்ட்டில் தொடங்குகிறது.
இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மோசமான தோல்வி காரணமாக ஜோபர்னஸ், ஆடம் வோக்ஸ், பெர்குசன், பீட்டர் நெவில், ஜோ மென்னி ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய இடைக்கால தேர்வு குழு தலைவர் டிரெவர் ஹோன்ஸ் இந்த அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளார்.
மேட்ரென்ஷா, பீட்டர் ஹேண்ட்ஸ் காம்ப், நிக் மேடின்சன் ஆகிய 3 பேட்ஸ்மேன்களுக்கு வாய்ப்பு கிடைத்து உள்ளது. இந்த 3 பேருமே டெஸ்ட் போட்டிக்கு அறிமுக வீரர்கள் ஆவார்கள். வேகப்பந்து வீரர்கள் சாயெர்ஸ், ஜேக்சன் பேர்ட், விக்கெட் கீப்பர் மேக்யூ வாடே ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்து உள்ளது.
1984-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியில் 6 வீரர்கள் மாற்றம் செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி வருமாறு:-
ஸ்டீவன் சுமித் (கேப்டன்), டேவிட் வார்னர், மேட் ரென்ஷா, உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ், கோம்ப், நிக்மேடின்சன், மேக்யூ வாடே (விக்கெட் கீப்பர்), ஸ்டார்க், ஹாசல்வுட், நாதன் லயன், ஜேக்சன் பேர்டு, சாயெர்ஸ்.

Next Story
×
X