என் மலர்
செய்திகள்
X
தொடரும் காயம்: ஷ்ரேயாஸ் அய்யர், சர்பராஸ் கான் விளையாடுவது சந்தேகம்
Byமாலை மலர்4 April 2017 6:05 PM IST (Updated: 4 April 2017 6:05 PM IST)
ஐ.பி.எல். தொடர் நாளை தொடங்கும் நிலையில் ஷ்ரேயாஸ் அய்யர் (டெல்லி), சர்பராஸ் கான் (பெங்களூரு) விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்பட்டுள்ளது.
‘ஐ.பி.எல். சீசன் 10’ டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் காயம் காரணமாக முக்கியமான வீரர்கள் பலர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்தியாவின் இளம் வீரர்களான ஷ்ரேயாஸ் அய்யர், சர்பராஸ் கான் ஆகியோர் அணியில் இடம்பெற மாட்டார்கள் எனத் தெரிகிறது.
டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடி வந்தவர் ஷ்ரேயாஸ் அய்யர். இளம் வீரரான அய்யர் ரஞ்சி டிராபி மற்றும் உள்ளூர் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தரம்சாலா டெஸ்டில் கோலி களம இறங்குவது குறித்து கேள்விக்குறியாக இருந்தது.
இதனால் கோலிக்குப் பதிலாக மாற்று வீரராக களம் இறங்க தயார் நிலையில் இருந்தவர் அய்யர். டெல்லி அணியின் குயிண்டான் டி காக், டுமினி ஆகியோர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனால் அய்யர் முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் அய்யருக்கு அம்மை நோய் தாக்கியுள்ளது. இதனால் சில வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டியுள்ளது. ஆகவே சில போட்டிகளில் ஷ்ரேயாஸ் அய்யர் களம் இறங்கமாட்டார் என்று கூறப்படுகிறது.
இதேபோல் பெங்களூர் அணியின் முன்னணி வீரரான லோகேஷ் ராகுல் காயத்தால் தொடரில் இருந்து விலகியுள்ளார். விராட் கோலி முதல் இரண்டு வாரங்கள் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டி வில்லியர்ஸ் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் அந்த அணியின் இளம் வீரரான சர்பராஸ் கான் பயிற்சியின் போது காயத்திற்குள்ளாகியுள்ளார். இதனால் இவரும் இந்த தொடர் முழுவதும் விளையாட முடியாமல் வெளியேறுவார் என்று கூறப்படுகிறது.
இதனால் ஐ.பி.எல். சீசன் 10 தொடரில் ஏராளமான வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
Next Story
×
X