என் மலர்
செய்திகள்
X
வெளிநாட்டு வீரர்கள் பொறுப்புடன் விளையாடவில்லை: தோல்வி குறித்து சேவாக் கருத்து
Byமாலை மலர்15 May 2017 9:06 PM IST (Updated: 16 May 2017 6:20 AM IST)
புனே அணிக்கெதிராக பஞ்சாப் அணி 73 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்ததற்கு வெளிநாட்டு வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டமே முக்கிய காரணம் என்று சேவாக் கூறியுள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் நேற்று புனேவில் நடைபெற்ற போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. இதில் வெற்றி பெற்றால்தான் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 73 ரன்னில் சுருண்டது. வெளிநாட்டைச் சேர்ந்த மார்ட்டின் கப்தில், மோர்கன், ஷேன் மார்ஷ் மற்றும் மெக்ஸ்வெல் ஆகிய நான்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க தவறினார்கள். அவர்கள் அவுட்டால் பஞ்சாப் அணி 32 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது.
இந்த தோல்விக்கு வெளிநாட்டு வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டம்தான் முக்கிய காரணம் என்று சேவாக் கூறியுள்ளார்.
இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘இந்த தோல்வியால் நான் மிகுந்த ஏமாற்றம் அடைந்தேன். எந்தவொரு வெளிநாட்டு வீரர்களும் பொறுப்புக்களை எடுத்துக் கொண்டு விளையாடவில்லை என்பதை என்னால் சொல்ல முடியும்.
அவர்கள் 12 முதல் 15 ஓவர் வரை நிலைத்து நின்று விளையாடியிருக்க வேண்டும். அவர்கள் நான்கு பேரில் ஒருவராவது 15 ஓவர் வரை நிலைத்து நின்றிருக்க வேண்டும். ஆனால், ஒருவர் கூட தங்களது பொறுப்புக்களை உணர்ந்து ஆடவில்லை’’ என்றார்.

Next Story
×
X