என் மலர்
செய்திகள்
X
பாகிஸ்தான் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டி - 7 விக்கெட் வித்தியாசத்தில் உலக லெவன் அணி திரில் வெற்றி
Byமாலை மலர்14 Sept 2017 12:55 AM IST (Updated: 14 Sept 2017 12:55 AM IST)
பாகிஸ்தான் அணிக்கெதிரான 2-வது டி20 போட்டியில் உலக லெவன் அணி, ஒரு பந்து மீதம் வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
லாகூர்:
பாகிஸ்தானில் உள்ள கடாஃபி மைதானத்தில் பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ( 13-ம் தேதி ) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அஹமது ஷேசாத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பகர் சமான் 13 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
அடுத்து ஷேசாத் உடன் இளம் வீரர் பாபர் ஆசம் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 12.2 ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்னைத் தொட்டது.
அணியின் ஸ்கோர் 130 ரன்களை எட்டியபோது ஷேசாத் 43 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து சோயிப் மாலிக் களம் இறங்கினார். பாபர் ஆசம் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 45 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். அப்போது பாகிஸ்தான் 16.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது.
சோயிப் மாலிக் 23 பந்தில் 39 ரன்னிலும், சர்பிராஸ் அஹமது ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. உலக லெவன் அணி பந்துவீச்சில் சாமுவேல் பத்ரி, திசாரா பெரேரா தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.
தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உலக லெவன் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பாலூம், ஹாசிம் அம்லாவும் களமிறங்கினர். இக்பால் 23 ரன்களில் சோஹைல் கான் பந்தில் சோயிப் மாலிக்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டிம் பெய்ன் 10 ரன்னில் இமாத் வாசிம் வேகத்தில் போல்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அம்லா 37 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
கேப்டன் டூபிலஸிஸ் டூபிலஸிஸ் 20 ரன்களில் அவுட்டானார். இதன்மூலம் உலக லெவன் அணி 14 ஓவர்களில் 106 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது. அடுத்து களமிறங்கிய திசாரா பெரேரா - ஹாசிம் அம்லாவுடன் ஜோடி சேர்ந்து வெற்றியை உறுதி செய்தனர். உலக லெவன் அணி 19.5 ஓவரின் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் ஹாசிம் அம்லா 72 ரன்களுடனும், அதிரடியாக விளையாடிய திசாரா பெரேரா 19 பந்துகளில் 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். திசாரா பெரேரா ஐந்து சிக்ஸர்கள் அடித்தார்.
உலக லெவன் அணியின் திசாரா பெரேரா ஆட்டநாயகன் விருது பெற்றார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. வெற்றியைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டி, 15ம் தேதி நடைபெறுகிறது.

Next Story
×
X