என் மலர்
செய்திகள்
X
கேப்டவுன் மைதான கண்ணோட்டம்
Byமாலை மலர்6 Feb 2018 1:47 PM IST (Updated: 6 Feb 2018 1:47 PM IST)
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி நடைபெறும் கேப்டவுன் மைதானம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் 3-வது ஒருநாள் போட்டியில் மேலும் கேப்டவுன் மைதான கண்ணோட்டம்.
1992-ம் ஆண்டு இங்கு ஒருநாள் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவுக்கு எதிராக இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி கேப்டவுன் நியூலேன்ட் மைதானத்தில் 4 போட்டியில் விளையாடி உள்ளது. இதில் இரண்டு ஆட்டத்தில் வெற்றி பெற்றது. தென்ஆப்பிரிக்கா, கென்யாவை வென்று இருந்தது. 2 போட்டியில் (தென்ஆப்பிரிக்கா) தோற்றது. தென் ஆப்பிரிக்கா 33 போட்டியில் விளையாடி 28-ல் வெற்றி பெற்றது. 5 போட்டியில் மட்டுமே தோற்றது.
கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி இந்த மைதானத்தில் தென்ஆப்பிரிக்கா 40 ரன்னில் இலங்கையை வீழ்த்தி இருந்தது. இந்திய அணி கடைசியாக 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் இங்கு விளையாடியது. ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இருந்தது.
தென்ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் இழப்புக்கு 367 ரன் குவித்த இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோராகும். பாகிஸ்தான் அணி 43 ரன்னில் (1993) சுருண்டதே இந்த மைதானத்தில் குறைந்த பட்ச ஸ்கோராகும்.
காலிஸ் 21 ஆட்டத்தில் விளையாடி 662 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். டிவில்லியார்ஸ் 545 ரன் எடுத்தார். டுபெலிசிஸ் 185 ரன் குவித்ததே ஒரு ஆட்டத்தில் அதிகபட்சமாகும். போல்லாக் அதிகபட்சம் 30 விக்கெட் எடுத்தார்.

Next Story
×
X