என் மலர்
செய்திகள்
X
ஜூனியர் உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாட யுவராஜ் சிங் டிப்ஸ்தான் காரணம்: ஷுப்மான் கில்
Byமாலை மலர்6 Feb 2018 6:49 PM IST (Updated: 6 Feb 2018 6:49 PM IST)
ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி ஆட்ட நாயகன் விருது பெற யுவராஜ் சிங்தான் முக்கிய காரணம் என ஷுப்மான் கில் கூறியுள்ளார். #U19CWCfinal #Shubman Gill
நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டு சாம்பியன் பட்டம் வென்றது. இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஷுப்மான் கில்லும் ஒருவர். பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தினார்.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஆட்டத்தில் 54 பந்தில் 63 ரன்களும், வங்காள தேசத்திற்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் 94 பந்தில் 86 ரன்களும், அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 94 பந்தில் 102 ரன்களும் (அவுட் இல்லை), இறுதிப் போட்டியில் 30 பந்தில் 31 ரன்களும் அடித்தார். நான்கு போட்டிகளில் 282 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். இதில் இரண்டு அரைசதமும் அடங்கும்.
உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி ரன்கள் குவிக்க யுவராஜ் சிங் அளித்த டிப்ஸ்தான் முக்கிய காரணம் என ஷுப்மான் கில் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஷுப்மான் கில் கூறுகையில் ‘‘நான் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டபோது யுவராஜ் சிங் எனக்கு ஏராளமான வகையில் அறிவுரை வழங்கினார். அவர் பல நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார். மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எப்படி செயல்பட வேண்டும் என்பதை விளக்கினார். என்னுடன் பேட்டிங் செய்து அறிவுரைகள் வழங்கினார். அது எனக்கு உலகக்கோப்பை தொடரில் சாதிக்க பெரிதும் உதவியாக இருந்தது’’ என்றார்.
ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஷுப்மன் கில்லை ஏலம் எடுத்துள்ளது. மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க இவருக்கு அதிக வாய்ப்புள்ளது.

Next Story
×
X