என் மலர்
செய்திகள்
X
ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை எப்.சி.யை வீழ்த்தியது பெங்களூரு எப்.சி.
Byமாலை மலர்6 Feb 2018 11:43 PM IST (Updated: 6 Feb 2018 11:43 PM IST)
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி. அணி 3-1 என்ற கணக்கில் சென்னை எப்.சி. அணியை வீழ்த்தியது. #ISL2017
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் பெங்களூரு எப்.சி. அணி 3-1 என்ற கணக்கில் சென்னை எப்.சி. அணியை வீழ்த்தியது.
10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. நேற்று சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை எப்.சி. மற்றும் பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் பெங்களூரு அணி சார்பில் 2-வது நிமிடத்தில் ஹாகிபும், 63-வது நிமிடத்தில் மிகுவும், 90-வது நிமிடத்தில் சுனில் சேத்தி ஒரு கோலும் அடித்தனர்.
ஆனால், சென்னை எப்.சி. அணியின் சார்பில் பிரான்சிஸ் பெர்னாண்டஸ் 33-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, இந்த போட்டியில் பெங்களூரு அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து பெங்களூரு எப் சி அணி 30 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. #ISL2017

Next Story
×
X