search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டர்பன் டெஸ்ட்- ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்
    X

    டர்பன் டெஸ்ட்- ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்

    தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் 76 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்துள்ளது.
    தென்ஆப்பிரிக்கா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் டர்பனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி பான்கிராப்ட், டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பான் கிராப்ட் 5 ரன்கள் எடுத்த நிலையில் பிலாண்டர் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வார்னர் உடன் கவாஜா ஜோடி சேர்ந்தார். கவாஜா 14 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    3-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வார்னர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்த அரைசதம் மூலம் தென்ஆப்பிரிக்கா மண்ணில் தொடர்ச்சியாக 6 அரைசதங்களுக்கு மேல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

    அரைசதம் அடித்த வார்னர் முதல்நாள் மதிய உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது ஆஸ்திரேலியா 27 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்மித் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும், ஸ்மித் உடன் ஷேன் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். ஸ்மித் 94 பந்தில் 10 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய ஷேன் மார்ஷ் 40 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    6-வது விக்கெட்டுக்கு மிட்செல் மார்ஷ் உடன் விக்கெட் கீப்பர் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடியது.

    ஆஸ்திரேலியா 76 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை குறுக்கீட்டது. அப்போது மிட்செல் மார்ஷ் 32 ரன்னுடனும், பெய்ன் 21 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    Next Story
    ×