என் மலர்
செய்திகள்
X
அவர் ஒரு மனிதர்தான்- பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட மெஸ்சிக்கு அக்யூரோ ஆதரவு
Byமாலை மலர்17 Jun 2018 4:35 PM IST (Updated: 17 Jun 2018 4:35 PM IST)
மெஸ்சியும் சாதாரண மனிதர்தான் என்று பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட அவருக்கு, மற்றொரு அர்ஜென்டினா வீரரான அக்யூரோ ஆதரவு தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு ஆட்டங்கள் நடைபெற்றன. 3-வது ஆட்டதில் பலம் வாயந்த அர்ஜென்டினா, முதன்முறையாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்ற ஐஸ்லாந்தை எதிர்கொண்டது.
இந்த ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. ஸ்கோர் 1-1 என சமநிலையில் இருந்தபோது, அர்ஜென்டினாவிற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. மெஸ்சி அடித்த பந்தை ஐஸ்லாந்து கோல் கீப்பர் ஹேன்ஸ் ஹால்டோர்சன் தடுத்தார்.
பெனால்டி வாய்ப்பு கோட்டைவிட்டு, அணியின் வெற்றியை தடுத்த மெஸ்சிக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மெஸ்சியும் ஒரு மனிதர்தான் என்று அர்ஜென்டினாவிற்காக கோல் அடித்தத செர்ஜியோ அக்யூரோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செர்ஜியோ அக்யூரோ கூறுகையில் ‘‘பெனால்டி வாய்ப்பை தவறவிட்ட மெஸ்சி சாதாரணமாகத்தான் இருக்கிறார். அவரும் ஒரு மனிதர்தான். இன்று நாங்கள் அவருக்கு துணையாக இருக்கிறோம். எந்தவொரு நிலையில் அவரால் அணியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்ல முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்.
முதல் போட்டி எப்போதுமே கடினம்தான். அர்ஜென்டினா ஒவ்வொரு எதிரணியையும் வீழ்த்த விரும்புகிறது. குரோஷியா போட்டியில் இதைவிட சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.

Next Story
×
X