என் மலர்
செய்திகள்
X
டெஸ்டுதான் சிறந்தது என்பதை இங்கிலாந்து, இந்தியா உலகிற்கு ஞாபகப்படுத்த வேண்டும் - பிஷன் பெடி
Byமாலை மலர்25 July 2018 6:33 PM IST (Updated: 25 July 2018 6:33 PM IST)
டெஸ்ட் போட்டிதான் கிரிட்கெட்டில் எப்போதுமே சிறந்தது என்பதை இங்கிலாந்து, இந்தியா உலககிற்கு ஞாபகப்படுத்த வேண்டும் என்று பிஷன் பேடி தெரிவித்துள்ளார். #ENGvIND
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிஷன் பெடி. இவர் 1967 முதல் 1979-ம் ஆண்டு வரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்து இந்தியா இடையிலான டெஸ்ட் தொடர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் காப்பாற்றப்படும் என்று நம்புகிறார்.
இதுகுறித்து பிஷன் பெடி கூறுகையில் ‘‘என்னுடைய தத்துவம் மிகவும் எளிதானது. நான் சிறந்தவன் என்று நம்புவேன். ஆனால், நான் எப்போதுமே அதற்காக மோசகமாக தயாராகியுள்ளேன்.
என்னுடைய வாழ்நாள் முடியும் வரை டெஸ்ட் கிரிக்கெட் சாகாது என்று நம்புகிறேன். இந்த கருத்து செழித்து வளர வேண்டும். இது கிரிக்கெட்டை உயிரோடு வைக்கும். கிரிக்கெட் விளையாட்டு அதன் தன்மையை இழந்து விடக்கூடாது என்பதைதான் நாம் எதிர்பார்க்கிறோம்.
கிரிக்கெட்டில் என்ன செய்துள்ளோம் என்பதை மற்ற போட்டிகளுடன் நாம் கற்பனை செய்து பார்க்க முடியுமா?. மக்களுக்கு கோல்ஃப் விளையாட்டை பார்க்க நேரமில்லை. அதனால் 18 ஹொல்ஸில் இருந்து 3 ஹொல்ஸாக குறைக்கலாமா?. இது நடக்கக்கூடாது. இது கால்பந்து போட்டியிலும் நடக்காது. எந்தவொரு போட்டியிலும் நடக்கக்கூடாது.
கிரிக்கெட்டின் அடிப்படை தன்மை என்னவென்றால், நிதானமாக ஐந்து நாட்களுக்கு மேல் விளையாட வேண்டும் என்பதுதான். கிரிக்கெட்டை கெடுக்கும் டி20 அல்லது 100 பந்துகள் போட்டி அல்ல. இது கேலிக்கூத்தானது. இந்தியா மற்றும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் ஏன் சிறந்தது என்பதை உலகிற்கு ஞாபகப்படுத்த வேண்டியது தேவையானது’’ என்றார்.

Next Story
×
X